காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வலங்கைமானில் கடைகள் அடைப்பு


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வலங்கைமானில் கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 12 April 2018 4:15 AM IST (Updated: 12 April 2018 1:00 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வலங்கைமானில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டன.

வலங்கைமான்,

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர், மாணவர்கள், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பா.ம.க. சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வலங்கைமான், ஆவூர், அரித்துவாரமங்கலம், கோவிந்தகுடி, ஆலங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 250-க்கும் மேற்பட்ட கடைகள் நேற்று அடைக்கப்பட்டு இருந்தன.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஆனால் வழக்கம்போல் பஸ்கள் மற்றும ஆட்டோக்கள் ஓடின. 

Next Story