காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து மாவட்டத்தில் முழுஅடைப்பு போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து மாவட்டத்தில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் தனியார் பஸ்கள் ஓடவில்லை.
விழுப்புரம்,
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காத மாநில அரசை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் நேற்று பாட்டாளி மக்கள் கட்சி, காவிரி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு, தமிழ்நாடு உழவர் பேரியக்கம் ஆகியவை சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் மற்றும் அனைத்து விவசாய அமைப்புகளும், வணிகர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து வியாபாரிகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் தங்களது கடைகளை நேற்று அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு சில இடங்களில் கடைகள் திறக்கப்பட்டபோதிலும் பா.ம.க.வினர் அங்கு சென்று அந்த வியாபாரிகளிடம் முழு அடைப்பிற்கு ஆதரவு கேட்டு துண்டு பிரசுரம் வினியோகம் செய்ததன்பேரில் அவர்களும் சிறிது நேரத்தில் கடைகளை அடைத்துவிட்டு சென்றனர்.
விழுப்புரம் நகரில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், கடைகள், ஓட்டல்கள், சிறு வியாபார கடைகள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னை- திருச்சி நெடுஞ்சாலை, விழுப்புரம்- புதுச்சேரி சாலை, கே.கே.சாலை, காமராஜர் வீதி, எம்.ஜி.சாலை, திரு.வி.க. சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இதேபோல் கள்ளக்குறிச்சி, திண்டிவனம், வானூர், சங்கராபுரம், விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, செஞ்சி, மேல்மலையனூர், மரக்காணம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒன்றிரண்டு டீக்கடைகள், மருந்துக்கடைகள், பழக்கடைகள் மட்டுமே திறந்திருந்தன.
ஆனால் பெட்ரோல் நிலையங்கள் வழக்கம்போல் இயங்கின. காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட்டுகளும் வழக்கம்போல் திறந்திருந்தன. இருந்தபோதிலும் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்ததால் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது. இந்த கடையடைப்பு காரணமாக பொதுமக்கள், அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் மிகவும் அவதியடைந்தனர். திருக்கோவிலூரில் கடைகள் திறந்து இருந்தன. அரசு மற்றும் தனியார் பஸ்கள் பெருமளவில் ஓடின. மாவட்டம் முழுவதும் 80 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த முழு அடைப்பு போராட்டத்தினால் அரசு பஸ் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை. பாட்டாளி தொழிற்சங்கத்தை தவிர மற்ற அனைத்து தொழிற்சங்கத்தினரும் நேற்று வழக்கம்போல் பணிக்கு சென்றதால் அரசு பஸ்கள் எப்போதும்போல் இயக்கப்பட்டன.
அதன்படி நேற்று காலை 6 மணி முதல் மாவட்டத்தில் உள்ள 11 போக்குவரத்துக்கழக பணிமனைகளில் இருந்தும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் இந்த பஸ்களில் பயணிகள் கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள பஸ் நிலையங்களும் பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடியது.
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தனியார் பஸ் உரிமையாளர்கள் தங்களது பஸ்களை இயக்கவில்லை. இதனால் தனியார் பஸ்கள் அனைத்தும் பஸ் நிலையங்கள், பெட்ரோல் நிலையங்களில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதுபோல் லாரிகள், ஆட்டோக்கள், வேன்களும் ஓடவில்லை.
முழு அடைப்பு போராட்டத்தையொட்டி ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க மாவட்டம் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story