காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ரெயில் மறியலுக்கு முயன்ற பா.ம.க.வினர் 25 பேர் கைது


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ரெயில் மறியலுக்கு முயன்ற பா.ம.க.வினர் 25 பேர் கைது
x
தினத்தந்தி 12 April 2018 4:30 AM IST (Updated: 12 April 2018 1:13 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ரெயில் மறியலுக்கு முயன்ற பா.ம.க.வினர் 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

பரமக்குடி,

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பரமக்குடியில் போராட்டம் நடைபெற்றது. மாநில துணை பொது செயலாளர் தளபதி ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் தங்கராஜ், சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், மாநில துணை தலைவர் அறிவழகன், நகர் செயலாளர் முருகேசன், தொழிற்சங்க செயலாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டபடி ஐந்துமுனை பகுதியில் இருந்து ஊர்வலமாக ரெயில் மறியல் செய்ய ரெயில் நிலையத்துக்கு வந்தனர். அங்கு அவர்களை போலீசார் வழிமறித்து 25 பேரை கைதுசெய்தனர். 

Next Story