திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து
திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடைகள் எரிந்து சேதமானது.
திருப்பூர்,
திருப்பூர் காசிப்பாளையத்தில் பனியன் நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிறுவனத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் வேலை செய்து வருகிறார்கள். நேற்று வழக்கம் போல் அந்த பனியன் நிறுவனத்தில் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். ஆடைகள் தயாரிக்கப்பட்டு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்புவதற்காக அட்டைப்பெட்டிகளில் அடைத்து பெரிய குடோனில் அடுக்கி தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது.
நேற்று மதியம் 1.30 மணி அளவில் தொழிலாளர்கள் மதிய உணவு இடைவேளைக்கு சென்றனர். அப்போது பனியன் ஆடைகள் இருப்பு வைத்திருந்த குடோனில் இருந்து திடீரென்று கரும்புகை வெளியேறியது. இதை கவனித்த தொழிலாளர்கள் விரைந்து சென்று தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. தீ மளமளவென பரவியது.
உடனடியாக திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. குடோன் முழுவதும் இருந்த ஆடைகளுக்கு தீ பரவியது. இதைத்தொடர்ந்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 3 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. அதுபோல் 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணிக்கு பயன்படுத்தப்பட்டன.
குடோனின் ஜன்னல் வழியாக தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணி நடந்தது. பின்னர் பக்கவாட்டு சுவர்களை இடித்து தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டு குடோனில் கருகிய ஆடைகளை வெளியே அப்புறப்படுத்தினார்கள். மாலை 6 மணி வரை தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடந்தது.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடைகள் எரிந்து சேதமடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக திருப்பூர் ஊரக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீயை அணைக்கும் பணி விரைந்து நடந்ததால் அருகில் உள்ள மற்றொரு குடோனுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story