காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மாவட்டம் முழுவதும் பா.ம.க.வினர் போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவண்ணாமலையில் ரெயில் மறியலில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர், விவசாய சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பா.ம.க. சார்பில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
பா.ம.க. முன்னாள் எம்.பி.யும்., மாநில துணைத் தலைவருமான துரை, மாநில தேர்தல் பிரசார குழு தலைவர் எதிரொலிமணியன் ஆகியோர் தலைமையில், பா.ம.க.வினர் திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகே உள்ள சந்திப்பில் திரண்டனர். அப்போது அவர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் அவர்கள் ஊர்வலமாக திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில், ரெயில் மறியலில் ஈடுபட வந்தனர். திருவண்ணாமலை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரங்கராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, கிழக்கு இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் பா.ம.க.வினர் ரெயில் நிலையம் உள்ளே செல்ல முடியாதவாறு ரெயில் நிலையம் முன்பு பேரிகார்டுகள் அமைத்து அரண்போல் நின்றிருந்தனர். ரெயில் நிலைய நுழைவு வாயிலை வந்த அவர்கள் பேரிகார்டுகளை தள்ளிவிட்டு அதிரடியாக உள்ளே நுழைந்தனர். அதைத் தொடர்ந்து அவர்கள் தண்டவாளத்தில் நின்று கோஷங்களை எழுப்பினர். அப்போது மன்னார்குடியில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற பாமினி எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து கோஷங்களை எழுப்பினர்.
இதையடுத்து போலீசார் ரெயில் மறியலில் ஈடுபட்ட மாநில துணை பொதுச்செயலாளர் காளிதாஸ், மாவட்ட செயலாளர் செந்தில்குமார் உள்பட 150 பேரை கைது செய்தனர்.
பா.ம.க.வினர் கடையடைப்பு போராட்டம் என்று அறிவித்திருந்தாலும் திருவண்ணாமலையில் நேற்று பெரும்பாலான கடைகள் திறந்திருந்தன. ஒரு சில கடைகள் மட்டுமே அடைக்கப்பட்டிருந்தது.
ரெயில் மறியலுக்கு முன்பு பா.ம.க.வினர் சிலர் திருவண்ணாமலை பஸ் நிலையம் எதிரே உள்ள கடை வீதியில் கொடிகளுடன் ஊர்வலமாக சென்று கடையை அடைக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.
செய்யாறு டவுனில் ஆற்காடு சாலை, காந்தி சாலை உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பா.ம.க.வினர் ஊர்வலமாக சென்றபோது பஸ் நிலையம், ஆரணி கூட்ரோடு பகுதியில் பஸ்சினை வழிமறித்து கோஷங்களை எழுப்பினர். அதைத் தொடர்ந்து தலைமை தபால் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைச்செயலாளர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் முக்கூர் ராமஜெயம், ஜனாகிராமன், ஜாலிமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில துணை அமைப்பு செயலாளர் க.சீனுவாசன், மாவட்ட அமைப்பு செயலாளர் ஏழுமலை ஆகியோர் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்து செய்யாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்பட 132 பேரை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
களம்பூர் பா.ம.க. நகர செயலாளர் நடராஜன் தலைமையில், களம்பூரில் உள்ள தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. நகர செயலாளர் கே.டி.ஆர்.பழனி, பா.ம.க. நிர்வாகிகள் ஆறுமுகம், விஜயகுமார், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
களம்பூரில் ஒரு சில கடைகள் மட்டும் மூடப்பட்டு இருந்தன.
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் ஆ.வேலாயுதம் தலைமையில், பா.ம.க. நிர்வாகிகள் ஆரணி எம்.ஜி.ஆர். சிலை அருகில் இருந்து மார்க்கெட் ரோடு, காந்தி ரோடு வழியாக சென்று தச்சூர் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர்கள் மார்க்கெட் ரமேஷ், ராஜசேகர், நகர தலைவர்கள் வி.எஸ்.வெங்கடேசன், ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் தினேஷ், கார்த்தி, மாவட்ட துணை செயலாளர் வடிவேல், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் மெய்யழகன், கலைமணி, ராமு, வன்னியர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் கருணாகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக நிர்வாகிகள் நகரில் கடையடைப்பு நடத்திட வேண்டி ஊர்வலமாக சென்று திறந்திருந்த கடைகளை மூடச்சொல்லி வலியுறுத்தினர். நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தனியார் பஸ்கள் காலை 9 மணி வரை ஓடின. அதன்பிறகு ஓடவில்லை. ஆனால் வழக்கம்போல அரசு பஸ்கள் ஓடின.
படவேட்டுக்கு வந்த தனியார் பஸ்சை வழிமறித்து பா.ம.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமையில், பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
படவேடு பகுதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டதால் ரேணுகாம்பாள் கோவிலுக்கு வந்த பக்தர்கள் பூஜை பொருட்கள் கூட கிடைக்காமல் அவதிப்பட்டனர். ஓட்டல்களும் மூடப்பட்டிருந்தன.
கண்ணமங்கலம் பகுதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாயினர். மேலும் தனியார் பஸ்கள் ஓடவில்லை. அரசுப் பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டது.
கண்ணமங்கலம் கூட்ரோடு மற்றும் கொங்கராம்பட்டு சித்திரசாவடி கேட் பகுதியில் ஒரு சில டீக்கடைகள் தவிர, மற்ற கடைகள் மூடப்பட்டிருந்தது.

Related Tags :
Next Story