பா.ம.க. சார்பில் 4 இடங்களில் ரெயில் மறியல் போராட்டம் 963 பேர் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தர்மபுரி மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் 4 இடங்களில் ரெயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த போராட்டங்களில் பங்கேற்ற 963 பேரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி,
காவிரி நதிநீர் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் மற்றும் ரெயில்-சாலைமறியல் போராட்டம் நடத்த பா.ம.க. தலைமையிலான காவிரி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி மாநிலம் முழுவதும் நேற்று ரெயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.
இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, பாலக்கோடு, மொரப்பூர், பொம்மிடி ஆகிய 4 இடங்களில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
தர்மபுரி மாவட்ட பா.ம.க. சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் வெங்கடேஸ்வரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் தர்மபுரி நகரில் முக்கிய வீதிகள் வழியாக கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனர். பின்னர் தர்மபுரி ரெயில் நிலையத்தின் முன்பு சாலையில் அமர்ந்து கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். பின்னர் அவர்கள் ரெயில் நிலையத்திற்குள் சென்று தண்டவாளத்தை மறித்தபடி நின்றனர். இந்த நிலையில் பெங்களூருவில் இருந்து தர்மபுரி ரெயில் நிலையம் வந்த காரைக்கால் பயணிகள் ரெயிலை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பா.ம.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அந்த ரெயிலின் என்ஜின் மீதும், மேற்கூரை மீதும் ஏறி நின்று மத்திய அரசுக்கு எதிராகவும், காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினார்கள்.
இந்த போராட்டத்தில் கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் சாந்தமூர்த்தி, குமரன், மாவட்ட செயலாளர் சண்முகம், வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் பெரியசாமி, முன்னாள் எம்.பி. பாரிமோகன், மாவட்ட நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், மாது, நம்பிராஜன், வணங்காமுடி, சின்னசாமி, காமராஜ், ஜெயலட்சுமி கருணாநிதி உள்பட ஏராளமானோர் கருப்பு கொடி மற்றும் கட்சிக்கொடியுடன் பங்கேற்று கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்பட 310 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த மறியல் போராட்டத்தால் தர்மபுரி ரெயில்நிலையத்தில் ½ மணிநேரம் பரபரப்பு காணப்பட்டது.
மொரப்பூரில் நடைபெற்ற ரெயில் மறியல் போராட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தலைவர் ப.மதியழகன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் சா.மதியழகன் போராட்டத்தை தொடங்கி வைத்தார் மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் சின்னசாமி, முன்னாள் ஒன்றிய தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது மங்களூரிலிருந்து சென்னை நோக்கி சென்ற வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் மாவட்ட மாணவரணி சபரி, நிர்வாகி வன்னியபெருமாள், பசுவராஜ், சேட்டு, சங்கர், முன்னாள் ஒன்றிய செயலாளர் தண்டபாணி, பசுமை தாயகம் நிர்வாகிகள் வீரமணி, சரவணன், மாவட்ட இளைஞரணி வெங்கடேஷ், மாவட்ட மகளிரணி சென்னம்மாள், மாவட்ட துணை செயலாளர் மாயக்கண்ணன், நகர செயலாளர் சண்முகசுந்தரம் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என 95 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாப்பிரெட்டிப்படடி தொகுதி பா.ம.க. சார்பில் பொம்மிடியில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் சென்னை - கோவை விரைவு ரெயிலை 300-க்கும் மேற்பட்டோர் மறித்தனர். மறியலுக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநில உழவர் பெரியக்க செயலாளருமான இல.வேலுசாமி தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் அரசாங்கம், மாவட்ட செயலாளர் இமயவர்மன், மாநில அமைப்பு துணை செயலாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட உழவர் பேரியக்க செயலாளர் முத்துசாமி, தொகுதி அமைப்பு செயலாளர் சிவகுமார், அறிவழகன், பழனிசாமி, முருகேசன், ஒன்றிய செயலாளர்கள் தம்பிதுரை, ஸ்ரீதர், தென்னரசு, சின்னராஜ், சக்திவேல், சென்னகிருஷ்ணன், விஜயன், மகளிர் அணி நாகேஸ்வரி, மணிமேகலை ராஜா, கலைவாணி மற்றும் நகர செயலாளர்கள், சங்கர், பழனி, லட்சுமணன், அருள்குமார், ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த மறியலில் பங்கேற்ற 200 பேர் கைது செய்யப்பட்டனர். இதையொட்டி அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையில் ஏராளான போலீசார் பாதுகாப்பில் இடுபட்டனர்.
பா.ம.க.வை சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் பாலக்கோடு பஸ்நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்று பாலக்கோடு ரெயில் நிலையம் சென்றனர். அங்கு பெங்களூரு-நாகர்கோயில் பயணிகள் ரெயிலை மறித்து கோஷம் எழுப்பினர். உடனடியாக பாலக்கோடு போலீசார் அனைவரையும் கைது செய்து ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். போராட்டத்திற்கு மாநில துணை தலைவர் பாடிசெல்வம் தலைமை தாங்கினார். பாலக்கோடு நகர தலைவர் ராஜசேகர், நகர செயலாளர் சான்பாஷா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜவேல், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன், கந்தசாமி, பிக்கனஅள்ளி ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் முருகன் மற்றும் ஏராளமான நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர். பாலக்கோட்டில் ரெயில் மறியலில் ஈடுபட்ட பா.ம.க.வினர் 358 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாவட்டத்தில் 4 இடங்களில் நடைபெற்ற ரெயில் மறியல் போராட்டத்தில் மொத்தம் 963 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Tags :
Next Story