கல்லூரி மாணவி கடத்தலால் இருதரப்பினர் இடையே மோதல் வீடு சூறை; 13 பேர் மீது வழக்குப்பதிவு
தாரமங்கலம் அருகே கல்லூரி மாணவி கடத்தப்பட்ட விவகாரத்தால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு வீடு சூறையாடப்பட்டது. இதுதொடர்பாக 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தாரமங்கலம்,
தாரமங்கலம் அருகே முனியகவுண்டன் வளவைச் சேர்ந்த ஒரு மாணவி சேலத்தில் உள்ள கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த தம்பிபையன் என்பவருடைய மகன் சதீஷ்குமார் (வயது 22). விசைத்தறி தொழிலாளி. சதீஷ்குமாரும், அந்த மாணவியும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
கடந்த 9–ந்தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. விசாரித்தபோது சதீஷ்குமார் கடத்திச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து மாணவியின் உறவினர்கள் 7 பேர் சதீஷ்குமார் வீட்டுக்கு சென்று மாணவி கடத்தப்பட்டதாகவும், அவளை ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறினர்.
அப்போது அங்கிருந்த சதீஷ்குமார் உறவினர்கள் தம்பிபையன் (45), சேட்டு (25), ராஜா (40), சிவானந்தம் (41), சிவா (18), செல்வம் (32), ஆகியோர், மாணவி எங்கு இருக்கிறார்? என்று தெரியாது என்று கூறினர். இதனால் தகராறு ஏற்பட்டு இரண்டு தரப்பினரும் மோதிக்கொண்டனர். இதில் சதீஷ்குமார் வீடு அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டது. வீட்டில் இருந்த விசைத்தறி, நூல் ஆகியவை சேதப்படுத்தப்பட்டன. இதில் தம்பிபையன், ராஜா உள்பட 4 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுகுறித்து தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி, சப்–இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ஆகியோர் விசாரித்து இருதரப்பையும் சேர்ந்த 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story