தேனியில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி நீள சாமி சிலை
தேனியில் ஒரே கல்லில் 18 அடி நீளமுள்ள சாமி சிலை பிரம்மாண்டமாய் செதுக்கப்பட்டுள்ளது.
தேனி,
தேனி பங்களாமேடு பகுதியில் சிற்பங்கள் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருபவர் செல்வம். இவரும், இவருடைய மகன் வெங்கடேஷ்குமாரும் சேர்ந்து கற்களில் சிற்பங்கள், சிலைகள் தயாரித்து கோவில்களுக்கு வழங்கி வருகின்றனர். அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே பாம்பார்பட்டி கிராமத்தில் உள்ள புவனேஸ்வரி உடனுறை ஆதிஈஸ்வரர் கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக ஒரே கல்லில் 18 அடி நீளத்தில் அனந்த சயன பத்மநாபர் சிலை செய்துள்ளனர். இந்த சிலை பார்ப்பதற்கு பிரமாண்டமாய் காட்சி அளிக்கிறது.
இதுகுறித்து சிற்பி செல்வம் கூறுகையில், ‘கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் இருந்து சுமார் 80 டன் எடை கொண்ட கருங்கல்லை தேனிக்கு கொண்டு வந்தோம். அந்த கல்லில் நானும், எனது மகன் உள்ளிட்ட சிற்பிகள் சேர்ந்து, சுமார் 40 டன் எடையில் சிலை செய்துள்ளோம். இதில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் அனந்த சயன பத்மநாபர் மற்றும் பெரியாழ்வார், நம்மாழ்வார் சிலையும் இடம் பெற்றுள்ளது. வருகிற சித்ரா பவுர்ணமியன்று இந்த சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது’ என்றார். இந்த பிரமாண்ட சிலையை பொதுமக்கள் பலர் பார்த்து செல்கின்றனர்.
Related Tags :
Next Story