வாலிபருக்கு கத்திக்குத்து போலீசார் விசாரணை
திண்டுக்கல் அருகே வாலிபர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியை சேர்ந்த பழனிசாமி மகன் கோபிநாதன் (வயது 25). இவர் நேற்று இரவு அங்குள்ள கருப்பசாமி கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 3 பேர் கோபிநாதனை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதில், குடல் சரிந்து துடிதுடித்த கோபிநாதனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக நகர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story