ஓமியோபதி டாக்டர்கள் கலந்தாய்வு முகாம் நிறைவு சுகாதாரத்துறை செயலாளர் கலந்துகொண்டார்


ஓமியோபதி டாக்டர்கள் கலந்தாய்வு முகாம் நிறைவு சுகாதாரத்துறை செயலாளர் கலந்துகொண்டார்
x
தினத்தந்தி 12 April 2018 4:26 AM IST (Updated: 12 April 2018 4:26 AM IST)
t-max-icont-min-icon

2 நாட்களாக நடந்த ஓமியோபதி டாக்டர்களுக்கான கலந்தாய்வு முகாம் நிறைவு பெற்றது.

சென்னை, 

தமிழ்நாடு ஓமியோபதி மருத்துவ கவுன்சில் சார்பில், பதிவு பெற்ற ஓமியோபதி டாக்டர்களுக்கான கலந்தாய்வு முகாம் கடந்த 2 நாட்களாக சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. முகாமின் நிறைவு விழா கவுன்சில் தலைவர் டாக்டர் ஆர்.ஞானசம்பந்தம் தலைமையில் நேற்று நடைபெற்றது.

விழாவில், தமிழ்நாடு சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு, முறைப்படுத்தப்பட்டு தமிழக அரசிதழில் பிரசுரிக்கப்பட்டுள்ள 2018-ம் ஆண்டுக்கான ஓமியோபதி டாக்டர்களின் பட்டியலை வெளியிட்டார். அதனை, இந்திய மருத்துவத்துறை இயக்குனர் டாக்டர் எஸ்.செந்தில்ராஜ் பெற்றுக்கொண்டார். புதுச்சேரி அரசின் ஓமியோபதி ஒருங்கிணைப்பு அதிகாரி டாக்டர் என்.பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

விழாவில் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் பேசும்போது:-

டெங்குவை ஏற்படுத்தும் கொசு ஏராளமானோரை கடித்தாலும், குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே டெங்கு நோய் பாதிப்பு வருகிறது. இதற்கான காரணம் என்ன என்பதை ஓமியோபதி மருத்துவ முறைப்படி ஆய்வுகளை மேற்கொண்டு அதில் வரும் முடிவுகளை கொண்டு நோயை குணப்படுத்தும் வழி இருந்தால் அதனை பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

விழா முடிவில், டாக்டர் ஆர்.ஞானசம்பந்தம் நிருபர்களிடம் கூறும்போது, “1978-க்கு பிறகு ஓமியோபதி மருத்துவம் முறைப்படுத்தப்படாமல் இருந்தது. தற்போது முறைபடுத்தப்பட்ட பிறகு 15 ஆயிரத்து 178 ஆக இருந்த பி-கிரேடு ஓமியோபதி டாக்டர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 261 ஆகவும், 5 ஆயிரத்து 667 ஆக இருந்த ஏ-கிரேடு ஓமியோபதி டாக்டர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 814 ஆக குறைந்துள்ளது” என்று தெரிவித்தார். 

Next Story