நாகர்கோவிலில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நடந்தது


நாகர்கோவிலில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நடந்தது
x
தினத்தந்தி 13 April 2018 4:15 AM IST (Updated: 12 April 2018 10:16 PM IST)
t-max-icont-min-icon

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் முற்போக்கு வக்கீல்கள் அமைப்பு சார்பில் நேற்று நாகர்கோவில் கோர்ட்டு முன்பு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாகர்கோவில்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் முற்போக்கு வக்கீல்கள் அமைப்பு சார்பில் நேற்று நாகர்கோவில் கோர்ட்டு முன்பு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் அனிட்டர் ஆல்வின் தலைமை தாங்கினார். வக்கீல்கள் மரிய ஸ்டீபன், சதா, ஜெலஸ்டின், வெற்றிவேல், செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களில் சிலர் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர்.


Next Story