குமரி மாவட்டத்தில் தி.மு.க.–காங்கிரஸ் அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகளில் கருப்புக்கொடி
பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., காங்கிரஸ் கட்சி அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது.
நாகர்கோவில்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மக்கள் அனைவரும் தங்களது ஒன்றுபட்ட எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும், கருப்பு உடை அணிந்தும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.
அதன்படி நேற்று குமரி மாவட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் வீடுகளில், அலுவலகங்களில் கருப்புக்கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரான சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. வீடு நாகர்கோவில் ராமவர்மபுரம் வெள்ளாளர் காலனியில் அமைந்துள்ளது. அவரது வீட்டிலும், ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்திலும் கருப்புக்கொடி ஏற்றப்பட்டு இருந்தது. இதேபோல் ஆத்திக்காட்டுவிளை சீயோன்புரத்தில் உள்ள ஆஸ்டின் எம்.எல்.ஏ. வீட்டிலும், கருங்கல் பாலூரில் உள்ள குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரான மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. வீட்டிலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டது. மேலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான ராஜேஷ்குமார், பிரின்ஸ் ஆகியோர் வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றியிருந்தனர்.
நாகர்கோவில் சார்லஸ் மில்லர் தெருவில் உள்ள குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் தலைமையிலான நிர்வாகிகள் கருப்புக்கொடி ஏற்றி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மோடியை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மார்த்தாண்டம் அருகே உள்ள மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலும் கருப்புக் கொடி கட்டப்பட்டு இருந்தது.
குமரி மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் கருப்புக்கொடி ஏற்றிய தி.மு.க.வினர், கருப்பு உடைகள் அணிந்து சிறிது நேரம் மனிதசங்கிலியாக நின்று தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதேபோல் நிர்வாகிகள் வீடுகளிலும், அவரவர் வசிக்கும் பகுதிகளிலும் கருப்புக்கொடிகளை தி.மு.க.வினர் ஏற்றியிருந்தனர். காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளின் வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றப்பட்டிருந்ததை காணமுடிந்தது.
இந்த போராட்டத்தையொட்டி நாகர்கோவிலில் உள்ள தலைமை தபால் நிலையம், பி.எஸ்.என்.எல். அலுவலகம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. போலீசாரும் மாவட்டம் முழுவதும் ரோந்துப்பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

Related Tags :
Next Story