போலி டாக்டர் கைது


போலி டாக்டர் கைது
x
தினத்தந்தி 13 April 2018 3:45 AM IST (Updated: 13 April 2018 12:46 AM IST)
t-max-icont-min-icon

திருவாலங்காடு அருகே போலி டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருத்தணி,

திருத்தணி தாலுகா திருவாலங்காடு அருகே உள்ள ராமன்கோவில் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்பாபு (வயது 42). இவர் ஓமியோபதி மருத்துவம் படித்ததாக கூறி திருவாலங்காடு அருகே உள்ள மணவூர்குப்பம் கண்டிகை சாலையில் கடந்த 2 ஆண்டுகளாக கிளினிக் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. 

இது குறித்து அறிந்த திருவள்ளூர் மாவட்ட மருத்துவ துறை இணை இயக்குனர் இளங்கோவன் தலைமையில் மருத்துவ குழுவினர் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டு அவருக்கு மருத்துவம் அளிக்கவும் அனுமதி இல்லை என்று கூறி திருவாலங்காடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்கள். போலி டாக்டர் சுரேஷ்பாபுவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

Next Story