பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவர்கள் கருப்பு சட்டை அணிந்து போராட்டம்
பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திரு.வி.க. கல்லூரி மாணவர்கள் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சினையாக காவிரி நீர் இருந்து வருகிறது. காவிரி நீர் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்திய அரசு காலம் கடத்தி வருகிறது. இதனைத்தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமர் நரேந்திர மோடி, தமிழகம் வரும் போது கருப்புக்கொடி காட்டுவது என தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகள் அறிவித்து இருந்தது.
அதன்படி நேற்று சென்னையில் நடந்த ராணுவ கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அவருடைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் திரு.வி.க. அரசு கல்லூரி மாணவர்கள் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் கிளை தலைவர் சிவபாலன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர் மதன், மாவட்டக்குழு உறுப்பினர் சிவனேஸ்வரி மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் கருப்புக்கொடியை கல்லூரி வாசலில் கட்டினர்.
அதேபோல பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று திருவாரூர் வார்குச்சி தெரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகளில் தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் கருப்புக்கொடி கட்டியிருந்தனர். அதேபோல அப்பகுதியில் உள்ளவர்கள் கருப்பு சட்டை அணிந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதேபோல் திருவாரூர் விஜயபுரம் வர்த்தக சங்கத்தினர் கடைகளில் கருப்புக்கொடி ஏற்றினர். மேலும் கூடூர் கிராமத்தில் விவசாயிகள் தங்களது வீடுகளிலும் கருப்புக்கொடி கொடி கட்டியிருந்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தி.மு.க. மாணவரணி மாநில முன்னாள் இணை செயலாளர் வக்கீல் சோம.செந்தமிழ்ச்செல்வன் தலைமையில் நீடாமங்கலத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் கருப்புக்கொடி கட்டியிருந்தனர். இந்த நிகழ்ச்சியில் வர்த்தகர் சங்க தலைவர் பி.ஜி.ஆர்.ராஜாராமன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் சந்துரு, தி.மு.க. இளைஞரணியை சேர்ந்த ஆர்.ஆர்.ராம்ராஜ், நகர த.மா.கா. தலைவர் ராஜன் ரமேஷ், காங்கிரஸ் நிர்வாகி பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல நீடாமங்கலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் கருப்புக்கொடியை ஒன்றிய செயலாளர் சோம.ராஜமாணிக்கம் கட்டினார். கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் வி.எஸ்.கலியபெருமாள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நன்னிலம் கடைத்தெரு பகுதிகளில் கருப்புக்கொடி கட்டப்பட்டு இருந்தது. அதேபோல ஆட்டோ டிரைவர்கள் கருப்பு பட்டை அணிந்து இருந்தனர்.
திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான், சித்தமல்லி, செருகளத்தூர், புத்தகரம், மண்ணுக்குமுண்டான், பாலையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் வீடுகளில் கருப்புக்கொடி கட்டியிருந்தனர்.

Related Tags :
Next Story