சேதமடைந்த நிலையில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


சேதமடைந்த நிலையில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 13 April 2018 4:00 AM IST (Updated: 13 April 2018 1:13 AM IST)
t-max-icont-min-icon

சேதமடைந்த நிலையில் உள்ள கூத்தாநல்லூர் - வடபாதிமங்கலம் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூத்தாநல்லூர்,

கூத்தாநல்லூரில் இருந்து வடபாதிமங்கலம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலை வழியாக தினமும் தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், கொரடாச்சேரி, திருவாரூர், மன்னார்குடி, கூத்தாநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு ஏராளமான பேர் செல்கின்றனர். அதேபோல இந்த சாலை வழியாக பள்ளி மற்றும் கல்லூரி பஸ்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். சேதமடைந்த இந்த சாலை வழியாக தான் கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலகம், தாசில்தார் அலுவலகம், அரசு மருத்துவமனை ஆகியவற்றிற்கு செல்ல வேண்டி யுள்ளது.

சேதமடைந்த இந்த சாலையில் அடிக்கடி சிறு, சிறு விபத்துக்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. அவசர காலங்களில் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே சேதமடைந்த கூத்தாநல்லூர் - வடபாதிமங்கலம் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story