தூத்துக்குடியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 April 2018 2:15 AM IST (Updated: 13 April 2018 1:39 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் அரசு ஊழியர்கள் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் அரசு ஊழியர்கள் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கலையரசன் தலைமை தாங்கினார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். மக்களின் உயிருக்கு உலை வைக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

யார்-யார்?

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தனியார் நிதி உதவி பெறும் கல்லூரி அலுவலர் சங்க பொதுச் செயலாளர் சுப்பிரமணியன், தமிழ்நாடு நில அளவை அலுவலர் ஒன்றிப்பு மாவட்ட தலைவர் அண்ணாமலை பரமசிவன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் மகேந்திர பிரபு, வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் செந்தூர்ராஜன், சத்துணவு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் தமிழரசன், ஓய்வூதியர் கூட்டமைப்பு ஜெயபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மாவட்ட செயலாளர் வெங்கடேசன் நிறைவுரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள், அனைத்து துறை ஓய்வூதியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் பாக்கியசீலி நன்றி கூறினார்.

Next Story