நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை வளர்ச்சி திட்டப்பணிகள் கலெக்டர் லதா ஆய்வு
மாவட்டத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறைகளின் சார்பில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் லதா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சிவகங்கை,
மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் லதா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதன்படி சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெறும் விபத்து கால அவசர சிகிச்சை பிரிவு கட்டுமான பணியை அவர் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட தொடக்க நிலை இடையிட்டுச் சேவைகள் மைய முடிவுற்ற பணிகளை பார்வையிட்டார். பின்னர் மருத்துவக்கல்லூரி வகுப்பறை கட்டிடம் கட்டுமான பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு, அப்பணிகளை விரைந்து முடிக்கவும் அவர் உத்தரவிட்டார். மேலும் அங்குள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தினை பார்வையிட்டு அதன் செயல்பாட்டினை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
இதனைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையின் மூலம் ரூ.23½ லட்சம் மதிப்பீட்டில் மானாமதுரை-பரமக்குடி சாலையில் மேற்கொள்ளப்படும் சிறப்பு பழுது பார்த்தல் பணியினையும், ரூ.1¼ கோடியில் சாலையில் மேற்கொள்ளப்படும் மேம்படுத்துதல் மற்றும் தடுப்புச்சுவர் கட்டுதல் பணியினையும் கலெக்டர் பார்வையிட்டார். மேலும் அந்த சாலையில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் தடுப்புச்சுவர் கட்டுதல் பணியினையும், ரூ.1¾ கோடி மதிப்பீட்டில் இருவழி தடமாக அகலப்படுத்தி மேம்படுத்துதல் பணியினையும் அவர் ஆய்வு செய்தார். அத்துடன் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி ரூ.1½ கோடி மதிப்பீட்டில் முனைவென்றி சாலையில் நடைபெறும் மேம்படுத்துதல் பணி மற்றும் சிறுபாலம் கட்டும் பணியினை பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
பின்னர் காளையார்கோவிலில் பொதுப்பணித்துறையின் மூலம் நடைபெற்று வரும் புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டிட கட்டுமானப் பணியினை கலெக்டர் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களை அறிவுறுத்தினார்.

Related Tags :
Next Story