ஓடும் ரெயிலில் இருந்து டிக்கெட் பரிசோதகரை தள்ளிவிட்ட வடமாநில கும்பல்
காட்பாடி அருகே டிக்கெட் பரிசோதகரை, ஓடும் ரெயிலில் இருந்து வடமாநில கும்பலை சேர்ந்த 6 பேர் கீழே தள்ளிவிட்டனர். அவர்களை பிடிக்க ரெயில்வே போலீசார் திருப்பதிக்கு சென்றுள்ளனர்.
காட்பாடி,
யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில், நேற்று காலை வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை வழியாக காட்பாடிக்கு வந்து கொண்டிருந்தது. இந்த ரெயிலில் டிக்கெட் பரிசோதகராக பெங்களூருவை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 36) பணியில் இருந்தார்.
பயணிகளிடம் அவர் டிக்கெட் பரிசோதனை செய்து கொண்டிருந்தார். காட்பாடி- லத்தேரி இடையே ரெயில் வந்தபோது ஒரு முன்பதிவு பெட்டியில் வடமாநிலத்தை சேர்ந்த 6 பேர் பயணம் செய்தனர். அவர்களின் டிக்கெட்டுகளை காட்டுமாறு சந்தோஷ்குமார் கேட்டுள்ளார்.
ரெயிலில் இருந்து தள்ளிவிட்டனர்
அவர்களிடம் டிக்கெட் இல்லை. முன்பதிவு பெட்டியில் ஒட்டப்பட்டிருந்த பயணிகளின் பட்டியலிலும் அந்த 6 பேரின் பெயர்கள் இல்லை. இதுகுறித்து, சந்தோஷ்குமார் கேட்டபோது, வடமாநில கும்பல் அவருடன் வாக்குவாதம் செய்து சந்தோஷ்குமாரை தாக்கி உள்ளனர். இந்த நிலையில் ரெயில் சிக்னலுக்காக மெதுவாக வந்துகொண்டிருந்தது.
ரெயில் மெதுவாக சென்று கொண்டிருந்ததை பயன்படுத்தி வடமாநில கும்பல், சந்தோஷ்குமாரை ரெயிலில் இருந்து கீழே தள்ளி விட்டுள்ளனர். இதில் அவர் கீழே விழுந்து லேசான காயமடைந்தார். அதற்குள் காட்பாடி ரெயில் நிலையத்திற்கு ரெயில் சென்றது.
போலீஸ் விசாரணை
உடனே அந்த கும்பலை சேர்ந்த 6 பேரும் அந்தபெட்டியில் இருந்து இறங்கி வேறு பெட்டிக்கு மாறிச் சென்றுவிட்டனர். கீழே விழுந்ததில் காயமடைந்த சந்தோஷ்குமார் காட்பாடி ரெயில் நிலையத்திற்கு சென்று ரெயில்வே போலீசில் புகார் செய்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ரெயில்வே போலீசார் டிக்கெட் பரிசோதகரை தாக்கி தள்ளிவிட்டு தப்பிச்சென்ற வடமாநில கும்பலை சேர்ந்த 6 பேரையும் பிடிக்க திருப்பதிக்கு விரைந்து சென்றனர். அங்கு 6 பேர் கும்பலில் ஒருவரை பிடித்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story