பர்பானியில் வளர்ச்சி திட்டங்களை முடிக்கக்கோரி விவசாயிகள் கூட்டாக தற்கொலை மிரட்டல்


பர்பானியில் வளர்ச்சி திட்டங்களை முடிக்கக்கோரி விவசாயிகள் கூட்டாக தற்கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 13 April 2018 4:15 AM IST (Updated: 13 April 2018 4:14 AM IST)
t-max-icont-min-icon

பர்பானியில் வளர்ச்சி திட்டங்களை முடிக்கக் கோரி விவசாயிகள் கூட்டாக தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.

பர்பானி, 

பர்பானியில் வளர்ச்சி திட்டங்களை முடிக்கக் கோரி விவசாயிகள் கூட்டாக தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.

விவசாயிகள் குற்றச்சாட்டு

பர்பானி மாவட்டம் மனோலி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் நீர்பாசனம் உள்பட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் காலம் தாழ்த்துவதாக குற்றம்சாட்டினர். கடந்த 2012-ம் ஆண்டு முதல் கிராம சபை சார்பில் எந்தவொரு புதிய திட்டங்களும் முடிக்கப் படவில்லை எனவும், அனைத்து திட்டங்களும் வெறும் காகிதங்களில் தான் உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

மேலும் கோலாப்பூரில் காணப்படுவதைப போன்ற நீர்ப்பாசன திட்டங்கள் பர்பானியில் நிறைவேற்றப் பட்டிருந்தால் பல விவசாயி களின் தற்கொலைகளை தடுத்திருக்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

தற்கொலை மிரட்டல்

இந்தநிலையில் மாவட்ட நிர்வாகம் வளர்சித் திட்டங்களை முடிக்காததால் கூட்டாக தற்கொலை செய்து கொள்ளப்போவதாக விவசாயிகள் மிரட்டல் விடுத்தனர். வரும் 19-ந்தேதி பர்பானிக்கு வருகை தரும் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் அவர்கள் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்தனர்.

இது தொடர்பாக மன்வத் தாசில்தார் அலுவலகத்தில் மனோலி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் அவர்கள் கையொப்பம் இட்ட மனுவை சமர்ப்பித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story