10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் திறப்பு
நெட்டப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட பண்டசோழநல்லூர் கிராமத்தில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது.
வில்லியனூர்,
அதன்பிறகு ஏற்பட்ட ஆட்சிமாற்றம் உள்பட பல்வேறு காரணங்களால் இந்த கட்டிடம் திறக்கப்படாமலேயே இருந்தது. இதனால் திறப்பு விழா காண்பதற்கு முன்பே சமுதாய நலக்கூடம் மோசமான நிலைக்கு போனது. இதனால் பண்டசோழநல்லூர் கிராம மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். தங்கள் வீட்டு விழாக்களை தனியார் மண்டபங்களில் அதிக வாடகை கொடுத்து நடத்தி வந்தனர்.
இந்த சமுதாய நலக்கூடம் திறக்கப்படாதது குறித்து ‘தினத்தந்தி’ நகர்வலம் பகுதியில் சுட்டிக் காட்டப்பட்டது. இதையடுத்து, சமுதாய நலக்கூடத்தை திறக்க நெட்டப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயவேணி நடவடிக்கை எடுத்தார். அதன்பேரில் சமுதாய நலக்கூடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நேற்று திறப்பு விழா நடைபெற்றது. விஜயவேணி எம்.எல்.ஏ. முன்னிலையில் அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன் ஆகியோர் சமுதாய நலக்கூடத்தை திறந்துவைத்தனர். விழாவில் அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலர் மலர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story