டிராக்டர் கலெக்டர்..!


டிராக்டர் கலெக்டர்..!
x
தினத்தந்தி 13 April 2018 5:33 PM IST (Updated: 13 April 2018 5:33 PM IST)
t-max-icont-min-icon

இங்கிலாந்தில் வசிக்கிறார் 79 வயது பால் ராக்ஹம். மிகப் பெரிய பணக்கார விவசாயி இவர்.

விவசாயம் சார்ந்த பொருட்களை சேகரிப்பது என்றால் பால் ராக்ஹமிற்கு கொள்ளை பிரியமாம்.  குறிப்பாக உழவுக்கு பயன்படும் டிராக்டர்களை கடந்த 25 ஆண்டுகளாக சேகரித்து வருகிறார். அவரது அருங்காட்சியகத்தில் 240 டிராக்டர்கள் இருக்கின்றன. இவற்றின் இன்றைய மதிப்பு 20 கோடியே 40 லட்சம் ரூபாய். ஆனால் இவை அனைத்தும் தற்போது விற்பனைக்கு வந்திருக்கின்றன.

“எனக்கு இருக்கும் ஆர்வம் என் குடும்பத்தினருக்கு இல்லை. அதனால் இந்த டிராக்டர்களை விற்பனை செய்ய முடிவெடுத்திருக்கிறேன். மீதி வாழ்க்கையை சுவாரசியப்படுத்த வேறுவித பொழுதுபோக்குகளில் இறங்கப் போகிறேன்” என்கிறார் பால்.

உலகின் பல பகுதிகளில் இருந்தும் வரவழைக்கப்பட்ட டிராக்டர்கள், இன்றும் புத்தம் புதிதாகக் காட்சியளிக்கின்றன. 1916 முதல் 1970-ம் ஆண்டு வரை உள்ள டிராக்டர்கள் இவரிடம் இருக்கின்றன.

# ‘பணக்கார விவசாயி’ என்பதை கேட்பதற்கே சந்தோஷமா இருக்கு..!

Next Story