அரகண்டநல்லூர், உளுந்தூர்பேட்டையில் ரெயில் மறியல் போராட்டம்: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 145 பேர் கைது
வன்கொடுமை தடுப்பு சட்டத்துக்கு எதிரான உத்தரவை ரத்து செய்யக்கோரி அரகண்டநல்லூர், உளுந்தூர்பேட்டையில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 145 பேர் கைது செய்யப்பட்டனர்.
உளுந்தூர்பேட்டை,
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள உத்தரவை கண்டித்தும், இந்த உத்தரவை உடனே ரத்து செய்யக்கோரியும் நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூர் ரெயில் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தொகுதி செயலாளர் வீரவிடுதலைச்செல்வன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் திரண்டு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மன்னார்குடியில் இருந்து திருப்பதி செல்லும் பாமினி எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கு வந்தது. இதை பார்த்ததும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஓடிச்சென்று அந்த ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அரகண்டநல்லூர் போலீசார் விரைந்து சென்று ரெயில் மறியலில் ஈடுபட்ட வீரவிடுதலை செல்வன், மணம்பூண்டி ஒன்றிய செயலாளர் நாகேஸ்வரராவ், மாநில நிர்வாகி தமிழ்நிலவன், மாவட்ட துணை செயலாளர் அறிவுக்கரசு, திருக்கோவிலூர் ஒன்றிய செயலாளர்கள் சிவா, தர்மலிங்கம், தாசர்புரம் வெற்றி உள்பட 65 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று அரகண்டநல்லூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதேபோல் உளுந்தூர்பேட்டையில் ஒன்றிய செயலாளர் பாலசிங்கம் தலைமையில் திருநாவலூர் ஒன்றிய செயலாளர் வெற்றிமுரசு, கிழக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் தங்கரமேஷ், மாவட்ட செய்தி தொடர்பாளர் கனகஅன்பேத், நகர செயலாளர் வசந்தன் ஆகியோர் முன்னிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நகர் பஸ் நிறுத்தத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை ரெயில் நிலையத்துக்கு ஊர்வலமாக சென்றனர். அப்போது திருச்சியில் இருந்து விழுப்புரம் நோக்கி செல்லும் பயணிகள் ரெயில் உளுந்தூர்பேட்டைக்கு வந்தது. அந்த ரெயிலை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நிர்வாகிகள் தீந்தமிழன், செல்வகுமார், லெனின், சாமிதுரை, ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதுபற்றி அறிந்து வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர்கள் ஷாகுல்அமீது, போஸ், ஜோவிந்தர் சிங் ஆகியோர் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட 80 பேரை கைது செய்து, அங்குள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். கைதான இவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story