சுப்பிரமணியபுரத்தில் கடைகளின் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்


சுப்பிரமணியபுரத்தில் கடைகளின் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 14 April 2018 4:15 AM IST (Updated: 14 April 2018 1:25 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி-புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் டி.வி.எஸ்.டோல்கேட்டை அடுத்த சுப்பிரமணியபுரத்தில் ஏராளமான கடைகள் உள்ளன.

திருச்சி,

இந்த கடைகளின் முன்பு ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு இருப்பதாகவும், இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறையினருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து நெடுஞ் சாலைத்துறை உதவி பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் நேற்று பொக்லைன் எந்திரம் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கடைகளின் முன்பு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த மேற்கூரைகள், தகரகொட்டகைகள், விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன.

மேலும், கடைகளின் முன்பு ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வாசல்படிகளையும் இடித்து அகற்றினர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் சுப்பிரமணியபுரம் பகுதியில் தொடங்கி மாத்தூர் வரை நடைபெறுவதாக நெடுஞ் சாலைத்துறையினர் தெரிவித்தனர். மேலும், ஒரு சிலர் கடைகளின் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை அவர்களே அகற்றி கொண்டனர். இதையொட்டி அங்கு கே.கே.நகர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story