தண்டவாள பராமரிப்பு பணி: மதுரை–செங்கோட்டை பாசஞ்சர் ரெயில் நேரம் மாற்றம் நெல்லை–கோவை சிறப்பு ரெயில் நேரத்திலும் மாறுதல்


தண்டவாள பராமரிப்பு பணி: மதுரை–செங்கோட்டை பாசஞ்சர் ரெயில் நேரம் மாற்றம் நெல்லை–கோவை சிறப்பு ரெயில் நேரத்திலும் மாறுதல்
x
தினத்தந்தி 14 April 2018 3:30 AM IST (Updated: 14 April 2018 1:44 AM IST)
t-max-icont-min-icon

தண்டவாள பராமரிப்பு பணிக்காக மதுரை–செங்கோட்டை பாசஞ்சர் ரெயில் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மதுரை,

மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மதுரை–செங்கோட்டை பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56731) மதுரையில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 7.30 மணிக்கு புறப்படும். செங்கோட்டைக்கு காலை 10.45 மணிக்கு பதிலாக காலை 11.10 மணிக்கு சென்றடையும்.

மறுமார்க்கத்தில், செங்கோட்டையில் இருந்து மதியம் 12 மணிக்கு புறப்படும் ரெயில்(வ.எண்.56734) மதுரைக்கு மாலை 3.45 மணிக்கு பதிலாக மாலை 4.15 மணிக்கு மதுரை வந்தடையும்.

இந்த மாற்றம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 30–ந் தேதி வரை செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை, வியாழக்கிழமைகளில் இந்த ரெயில் வழக்கமான நேரத்தில் இயக்கப்படும்.

அதேபோல, நெல்லையில் இருந்து மதுரை வழியாக கோவைக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் புறப்படும் நேரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ரெயில்(வ.எண்.06019) நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் மாலை 6.20 மணிக்கு பதிலாக இரவு 9.40 மணிக்கு புறப்படும். மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு பதிலாக காலை 7 மணிக்கு கோவை சென்றடையும்.

இந்த ரெயில் கோவில்பட்டிக்கு இரவு 11.30 மணிக்கும், சாத்தூருக்கு நள்ளிரவு 11.55 மணிக்கும், விருதுநகருக்கு நள்ளிரவு 12.30 மணிக்கும், மதுரைக்கு நள்ளிரவு 1.15 மணிக்கும், திண்டுக்கல்லுக்கு 2.15 மணிக்கும், ஒட்டன்சத்திரத்துக்கு 2.50 மணிக்கும், பழனிக்கு 3.20 மணிக்கும், உடுமலைப்பேட்டைக்கு 3.50 மணிக்கும், பொள்ளாச்சிக்கு அதிகாலை 5.35 மணிக்கும், கிணத்துக்கடவுக்கு அதிகாலை 6.10 மணிக்கும், போத்தனூருக்கு காலை 6.43 மணிக்கும் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story