மீன்பிடி தடைகாலத்தை ஏப்ரல் மாதம் 1–ந்தேதி முதல் அமல்படுத்த வேண்டும் மீனவர்கள் கோரிக்கை


மீன்பிடி தடைகாலத்தை ஏப்ரல் மாதம் 1–ந்தேதி முதல் அமல்படுத்த வேண்டும் மீனவர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 14 April 2018 4:00 AM IST (Updated: 14 April 2018 1:44 AM IST)
t-max-icont-min-icon

மீன்பிடி தடை காலத்தை ஏப்ரல் மாதம் 1–ந்தேதி முதல் மே மாதம் 31–ந்தேதி வரை அமல்படுத்த வே ண்டும் என்று ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமேசுவரம்,

தமிழக கடல் பகுதியில் விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்ல 61 நாள் தடை காலம் இன்று (சனிக்கிழமை) நள்ளிரவு முதல் தொடங்குகிறது. இதையடுத்து ராமேசுவரத்தில் 850–க்கும் மேற்பட்ட மீன் பிடி விசைப்படகுகள் துறைமுக கடல் பகுதியல் அணி வகுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் சீரமைப்பு பணிக்காக படகுகளை கரையில் ஏற்றி வைக்கும் பணிகளை தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில் 61 நாள் தடை காலத்தை மாற்றியமைக்க வேண்டும் என ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் மத்திய–மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இது பற்றி ராமேசுவரம் விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகள் சேசுராஜா,சகாயம் ஆகியோர் கூறியதாவது:– ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் 15–ந் தேதியில் இருந்து மே மாதம் 29–ந் தேதி வரையிலும் 45 நாட்கள் மீன் பிடி தடை காலமாக இருந்து வந்தது. கடந்த ஆண்டு முதல் இந்த தடைகாலம் 61 நாட்களாக அரசால் நீட் டிக்கப்பட்டது.

இந்த தடை காலத்தை அரசு மாற்றி அமல்படுத்த வேண்டும். அதாவது ஏப்ரல் மாதம் 15–ந் தேதி தொடங்கும் தடைகாலம் ஜூன் மாதம் 14–ந் தேதி முடிவடைகிறது. அதன் பின்பு தான் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டிய நிலையில் உள்ளோம்.

இதனால் குழந்தைகளின் பள்ளிச்செலவுக்கு பணம் இல்லாமல் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே வரும் ஆண்டு முதல் 61 நாட்கள் தடை காலத்தை ஏப்ரல் மாதம் 1–ந் தேதி முதல் மே மாதம் 31–ந்தேதி வரை அமல்படுத்தி மத்திய–மாநிலஅரசுகள் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 தடை காலத்தில் மீனவர் ஒருவருக்கு ரூ.5000 நிவாரண தொகை அரசால் வழங்கப்படுகிறது. தடைகால நிவாரண தொகையை ஒரு நாளுக்கு 200 ரூபாய் வீதம் கணக்கிட்டு உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழக விசைப்படகு மீனவர்கள் சார்பாக மத்திய–மாநில அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story