குலமங்கலம் வாய்க்கால் பாலம் புதிதாக கட்டப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


குலமங்கலம் வாய்க்கால் பாலம் புதிதாக கட்டப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 14 April 2018 3:38 AM IST (Updated: 14 April 2018 3:38 AM IST)
t-max-icont-min-icon

காட்டூரில், குறுகலாக உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு சேதமடைந்துள்ள குலமங்கலம் வாய்க்கால் பாலம் புதிதாக கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

சாலியமங்கலம்,

தஞ்சை அருகே காட்டூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் தஞ்சை-மன்னை சாலையில் குலமங்கலம் வாய்க்கால் பாலம் உள்ளது. பழைமையான இந்த பாலத்தின் வழியாக தினமும் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், கோடியக்கரை, நாகை வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பாலம் குறுகலாக உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த விபத்தில் பாலத்தின் தடுப்பு சுவரின் மீது வாகனங்கள் மோதுகின்றன. இதனால் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து சேதம் அடைந்து காணப்படுகிறது.

மேலும், பாலம் குறுகலாக உள்ளதால் எதிர் எதிரே வாகனங்கள் வந்தால் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அப்போது வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றன. எனவே குறுகலாகவும், சேதமடைந்தும் காணப்படும் குலமங்கலம் வாய்க்கால் பாலத்தை இடித்து விட்டு புதிதாக அகலமாக கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Next Story