ஆன்மிக விழாக்கள் அமைதியின் பாதுகாவலனாக விளங்குகிறது
ஆன்மிக விழாக்கள், அமைதியின் பாதுகாவலனாக விளங்குகிறது என்று கவர்னர் பன்வாரிலல் புரோகித் கூ றினார்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் திருவையாறை அடுத்த கல்யாணபுரம் 1-ம் சேத்தியில் உள்ளது சீனிவாச பெருமாள் கோவில். இந்த கோவிலில் 300-ம் ஆண்டு கருடசேவை வீதியுலா நேற்று நடந்தது. இதனை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது.
இந்திய நாட்டின் நீண்ட நெடிய வரலாற்றில் சோழ பேரரசர்கள் மிகப்பெரிய வரலாற்று பதிவை விட்டுச் சென்றுள்ளனர். தமிழர் பண்பாட்டுத்தளம் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இதில் தஞ்சைக்கு இடம் உண்டு. பழமையான தஞ்சை பெரிய கோவில் தமிழனின் நாகரீகத்துக்கு சான்றாக உள்ளது.
திருவையாறு பகுதியை சேர்ந்த இசை மும்மூர்த்திகளான தியாகராஜர், சியாமாசாஸ்திரி, முத்துசாமி தீட்சிதரின் இசை இன்றளவும் மறக்க முடியாத அளவில் புகழ்பெற்றுள்ளது. கர்நாடக இசை பக்தி ரசத்தை இசையோடு கலந்து கொடுக்கிறது. கருடவாகனன் குறித்து ரிக்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. அது துணிவை தருகிறது.
புத்தமதத்தில் சுவர்ணா எனவும் அழைக்கப்படுகிறது. அமைதியின் பாதுகாவலனாகவும் விளங்குகிறது. இந்தியாவில் தெய்வத்தன்மை கொண்டதாகவும், தர்மத்தை காப்பதாகவும் இருக்கிறது. தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளில் தெய்வ சின்னமாக போற்றப்படுகிறது. இந்த நிகழ்வு தொன்மையான கலாசாரத்துக்கும், பண்பாட்டுக்கும் சிறப்பான உதாரணமாக கருதப்படுகிறது. வரும் சந்ததியினருக்கு இந்த பாரம்பரியத்தைக்கொண்டு சேர்ப்பதன் மூலம் இந்தியா நாட்டின் தனி சிறப்பான கலாசாரம், ஆன்மிக அடிப்படையான சமுதாய ஒற்றுமையை காக்கும். உலகமே ஒரே குடும்பம் என்பதை உணர்த்தும் இது போன்ற கலாசார விழாக்கள் மக்களிடையே அமைதி, கவுரவம், வளர்ச்சி, தன்னிறைவை கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கருடசேவை விழா கமிட்டி செயலாளர் முகுந்தன் வரவேற்றார். விழாவில் அமைச்சர் துரைக்கண்ணு, கலெக்டர் அண்ணாதுரை, தினமலர் வெளியீட்டாளர் கோபால்ஜி, மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல், சென்னை தமிழ்ச்சங்க செயலாளர் இளங்கோவன் கருடசேவை விழா கமிட்டியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கோவிலில் கருடசேவை விழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருடவாகன சேவை நேற்று இரவு நடந்தது. வருகிற 17-ந் தேதி காலை வெண்ணைத்தாழி உற்சவமும், 19-ந் தேதி காலை தேரோட்டமும், இரவு தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. 22-ந் தேதி விடையாற்றி விழா நடைபெறுகிறது. தினமும் பகலில் பல்லக்கு ஊர்வலமும், இரவில் சுவாமி வீதி உலாவும் நடை பெறுகிறது.

Related Tags :
Next Story