பெரியபாளையம் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம்
எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 2017-2018-ம் நிதி ஆண்டில் நடைபெற்ற பணிகள் கள ஆய்வு செய்தனர். பின்னர், சமூக தணிக்கைக்கு சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது. இனி வரும் காலங்களில் தொடர்ந்து 100 நாட்கள் வேலை வேண்டும், முறையாக சம்பளத்தை வங்கி கணக்கில் வழங்கவேண்டும். கேட்கும் அனைவருக்கும் வேலை அட்டை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை பொதுமக்கள் எழுப்பினர்.
இதில் எல்லாபுரம் ஒன்றிய வட்டார சமூக தணிக்கை வள அலுவலர் மேகராஜன் தலைமை தாங்கினார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் தமிழ்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் ஊராட்சி செயலாளர் குமரவேல் வரவேற்றார். எதிர்வரும் காலத்தில் இந்த திட்டத்தில் கால்வாய் தூர்வாரும் பணி, சாலை அமைக்கும் பணி, கட்டிடப்பணி, செடி வைக்கும் பணி, அதனை பராமரிக்கும் பணிகள் மேற்கொள்ள இருப்பதாக அதிகாரிகள் எடுத்து கூறினர்.
Related Tags :
Next Story