பெரியபாளையம் அருகே லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்; தேன் வியாபாரி பலி


பெரியபாளையம் அருகே லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்; தேன் வியாபாரி பலி
x
தினத்தந்தி 14 April 2018 4:44 AM IST (Updated: 14 April 2018 4:44 AM IST)
t-max-icont-min-icon

பெரியபாளையம் அருகே லாரி- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தேன் வியாபாரி பலியானார்.

பெரியபாளையம், 

திருச்சி மாவட்டம் மதுராபுரி தாலுகா துறையூர் கிராமம் நரிகுறவர் காலனியை சேர்ந்தவர் மணி(வயது 41). தேன் வியாபாரி. இவருக்கு ரேவதி (35) என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர் கடந்த வாரம் தனது குடும்பத்தினருடன் சென்னை செங்குன்றம் அருகே உள்ள காந்தி நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார். நேற்று முன்தினம் மாலை மோட்டார்சைக்கிளில் ஊத்துக்கோட்டை அருகே உள்ள மலைக்கு சென்று தேன் எடுத்துக்கொண்டு காந்திநகர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

ஊத்துக்கோட்டை- சென்னை நெடுஞ்சாலையில் பெரியபாளையம் அருகே ஆத்துப்பாக்கம் சாலை வளைவில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே சவுடுமண் ஏற்றி வந்த லாரி ஒன்று பழுதாகி சாலையோரம் நின்று கொண்டிருந்தது.

சாவு

மணி ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கண் இமைக்கும் நேரத்தில் லாரியின் பின்புறம் மோதியது. இதில் படுகாயம் அடைந்த மணி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த பெரியபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மோட்டார்சைக்கிள் மற்றும் லாரியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். 

Next Story