மோட்டார்சைக்கிள் மீது மினி பஸ் மோதல்: அரசு பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி


மோட்டார்சைக்கிள் மீது மினி பஸ் மோதல்: அரசு பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி
x
தினத்தந்தி 14 April 2018 5:25 AM IST (Updated: 14 April 2018 5:25 AM IST)
t-max-icont-min-icon

சங்ககிரி அருகே மோட்டார் சைக்கிள் மீது மினி பஸ் மோதிய விபத்தில், அரசு பள்ளி மாணவர்கள் 2 பேர் பலியாகினர்.

சங்ககிரி,

சங்ககிரி அருகே தேவண்ணக்கவுண்டனூர் மட்டம்பட்டியை சேர்ந்தவர் சங்கர். லாரி டிரைவர். இவரது மகன் சுதர்சனம் (வயது 16). சங்ககிரி அருகே உள்ள மாவெலிபாளையம் ஊஞ்சானூரை சேர்ந்த மாரிமுத்து மகன் தாமரைச்செல்வன் (16). நண்பர்களான சுதர்சனம், தாமரைச்செல்வன் ஆகிய 2 பேரும் வடுகப்பட்டி அருகே உள்ள பாப்பநாயக்கனூர் அரசு மாதிரிப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தனர்.

இவர்கள் 2 பேரும் நேற்று காலை பள்ளியில் நடக்கும் எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொது தேர்வுக்கான பயிற்சி வகுப்பிற்கு சென்றனர். பின்னர் வகுப்பை முடித்து விட்டு பள்ளியிலிருந்து பஸ் மூலம் வடுகப்பட்டிக்கு திரும்பினர்.

இந்தநிலையில் மாலை 6 மணிக்கு நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு 2 பேரும் வடுகப்பட்டியில் இருந்து சங்ககிரி நோக்கி சென்று கொண்டிருந்தனர். வழியில் பாப்பநாயக்கனூர் பிரிவு ரோட்டில் சென்ற போது, சங்ககிரியில் இருந்து வந்த தனியார் மினி பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த சுதர்சனம், தாமரைச்செல்வன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Next Story