தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அரியலூர்,
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அரியலூர் பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அரியலூர் தண்டாயுதபாணி, குறைதீர்க்கும் குமரன், மங்காயி பிள்ளையார், பெருமாள், சிவன், ஒப்பில்லாத அம்மன், மாரியம்மன் உள்ளிட்ட கோவில்களில் அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு சாமிகளுக்கு பல்வேறு விதமான அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன.
மங்காயி பிள்ளையார் சந்தனகாப்பு அலங்காரத்திலும், குறைதீர்க்கும் குமரன் பழத்திலான அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அரியலூர் அருகே உள்ள கல்லங்குறிச்சி கலியுகவரதராஜப்பெருமாள் கோவிலில் பெருமாள் ஸ்ரீ தேவி, பூ தேவியுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.
அரியலூர் மேலத்தெருவில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் செட்டி ஏரிக்கரையிலிருந்து பால்குடம் எடுத்தும், அலகு குத்தி கொண்டும் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
தமிழ் புத்தாண்டையொட்டி பெரம்பலூரில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் உள்ள பிரம்மபுரீஸ்வரர், அகிலாண்டேஸ்வரி, கணபதி, முருகன், காசிவிஸ்வநாதர், அன்னபூரணி மூலவர் சிலைகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மேலும் சந்திரசேகரர்-ஆனந்தவல்லி அம்பாள், பஞ்சமூர்த்திகள், மாரியம்மன், செல்லியம்மன், வெள்ளந்தாங்கி அம்மன் உற்சவமூர்்த்திகள் மகா மண்டபத்தில் வைக்கப்பட்டு மகாஅபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அபிஷேக ஆராதனைகளை திருச்செங்கோடு சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையில் குழுவினர் நடத்தி வைத்தனர். இதில் பெரம்பலூர் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் ராஜாராம், விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்க மாவட்ட தலைவர் வள்ளிராஜேந்திரன், புன்னகை மன்ற செயலாளர் சோழா அருணாசலம், கோவில் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். மாலையில் சந்திரசேகரர்-ஆனந்தவல்லி அம்பாள் உற்சவமூர்த்திகளின் திருவீதி உலா நடந்தது.
பெரம்பலூரில் உள்ள பஞ்சபாண்டவருக்கு தனி சன்னதி கொண்ட மரகத வல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கு திருமஞ்சனமும், மகாதீபஆராதனையும் நடந்தது. தாயாருக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. திருமஞ்சனத்தை கோவில் பட்டாச்சாரியார் பட்டாபிராமன் நடத்தி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள பாலமுருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு அதிகாலை பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் மகாதீபஆராதனையும் நடந்தது. பூஜைகளை கோவில் அர்ச்சகர் ரமேஷ்குருக்கள் நடத்திவைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல பெரம்பலூரை அடுத்த குரும்பலூரில் உள்ள தர்மசம்வர்த்தனி சமேத பஞ்சநதீஸ்வரர் கோவிலில் தமிழ்புத்தாண்டைமுன்னிட்டு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. விழாவில் பெரம்பலூர், குரும்பலூர், ஈச்சம்பட்டி, பாளையம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
தமிழ்புத்தாண்டையொட்டி ஆலத்தூர் ஒன்றியம் பாடாலூர் வேதநாராயண பெருமாள் கோவிலில் இருந்து பால் குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக சென்று பூமலை சஞ்சீவிராயர் மலை அடிவாரம் வந்தவுடன் அங்கு கோ பூஜை நடத்தப்பட்டு, ஒவ்வொரு படிகளுக்கும் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.
பின்னர், பால்குடத்தை எடுத்துச் சென்று மலை மேல் உள்ள சஞ்சீவிராயருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்து வழிபாடு நடத்தினர். இந்த சிறப்பு அபிஷேகத்தில் இரூர், பாடாலூர், திருவிளக்குறிச்சி, காரை, தெரணி, விஜயகோபாலபுரம், நாரணமங்கலம், ஆலத்தூர்கேட், மருதடி, சீதேவிமங்கலம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். அதனையடுத்து மலையின் அடிவாரத்தில் உள்ள வழிதுணை ஆஞ்சநேயருக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர், மலை அடிவாரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Tags :
Next Story