பிறந்த நாளையொட்டி அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை மரியாதை செலுத்தினர்
அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
புதுக்கோட்டை,
இந்தியா முழுவதும் நேற்று அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி, அம்பேத்கர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான ரகுபதி தலைமையிலும், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் முன்னிலையிலும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோல காங்கிரஸ் சார்பில் புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தலைவர் முருகேசன், தர்மதங்கவேலு ஆகியோர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல புதுக்கோட்டை மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் கட்சியின் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் செல்வின்ராஜ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நகர செயலாளர் வீரமணி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதைப்போல பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் அக்கட்சியின் மாநில செயலாளர் புரட்சி கவிதாசன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் மாநில இளைஞரணி செயலாளர் நியாஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதேபோல அம்பேத்கர் ஐக்கிய பேரவை சார்பில் மாவட்ட தலைவர் சசிக்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய கட்சியின் சார்பில் மாநில அமைப்பு செயலாளர் ரகுபதி தலைமையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்பட பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்புகள் சார்பில் அதன் நிர்வாகிகள் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மணமேல்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மணமேல்குடி கடைவீதியில் வைக்கப்பட்டு இருந்த அம்பேத்கர் உருவபடத்திற்கு அறந்தாங்கி தொகுதி செயலாளர் கதிர்வளவன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஆவுடையார்கோவில் கடைவீதியில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தெற்கு ஒன்றிய செயலாளர் சின்னத்துரை தலைமையிலும், ஆவுடையார்கோவில் வர்த்தக சங்கத்தினர் சார்பிலும் அம்பேத்கர் உருப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கந்தர்வகோட்டையில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவையொட்டி, எம்.எல்.ஏ. ஆறுமுகம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக வந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோல அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஒன்றிய செயலாளர் செங்கொடியான் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் விடுதலைசிறுத்தை கட்சி, நாம்தமிழர் கட்சி உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Related Tags :
Next Story