கும்மிடிப்பூண்டி அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.52 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்: உரிமையாளர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.52 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக குடோன் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் இருந்து மாதர்பாக்கம் செல்லும் வழியில் ஈச்சங்காடுமேடு என்ற கிராமம் உள்ளது. இங்கு உள்ள ராமலிங்கம்(வயது60) என்பவருக்கு சொந்தமான ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், அங்கிருந்து பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருவதாகவும், கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜனுக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து அவரது மேற்பார்வையில், ஆரம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் போலீசார் குடோனில் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர்.
அங்கு தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 262 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதன் மதிப்பு ரூ.52 லட்சம் ஆகும். அவற்றை பறிமுதல் செய்த போலீசார், மினி லாரியில் ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
போலீஸ் விசாரணையில், கவரைப்பேட்டையை அடுத்த தச்சூர் கூட்டுச்சாலையை சேர்ந்த ஏற்கனவே புகையிலை பொருட்கள் பதுக்கிய வழக்கில் தொடர்புடைய சதீஷ் என்பவர், மேற்கண்ட குடோனை வாடகைக்கு எடுத்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த ஆரம்பாக்கம் போலீசார் குடோன் உரிமையாளரான ராமலிங்கத்தை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story