சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சா.கணேசன் மரணம் - மு.க.ஸ்டாலின் இரங்கல்
சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சா.கணேசன் நேற்று முன்தினம் இரவு காலமானார்.
சென்னை,
சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சா.கணேசன். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவருக்கு வயது 89.
தி.மு.க.வின் ஆரம்ப கால தொண்டரான சா.கணேசன் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். 1970-ம் ஆண்டு நவம்பர் முதல் 1971-ம் ஆண்டு நவம்பர் வரையிலான ஒரு ஆண்டு காலம் சென்னை மாநகராட்சி மேயராகவும் பதவி வகித்தார். தியாகராயநகர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வாகவும் (1989-91) பணியாற்றி இருக்கிறார்.
மரணம் அடைந்த சா.கணேசனின் உடல் வளசரவாக்கம் பிருந்தாவன்நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
எளிமையின் இலக்கணமாக திகழ்ந்த தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், சென்னை முன்னாள் மேயருமான சா.கணேசன் மறைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, அவரது குடும்பத்தினருக்கும், தி.மு.க. தொண்டர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன். முன்னாள் மேயர் சா.கணேசனின் மறைவு திராவிட இயக்கத்திற்கும், தி.மு.க.வுக்கும் பேரிழப்பு.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சா.கணேசன் மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும் இரங்கல் செய்தி வெளியிட்டு உள்ளார்.

Related Tags :
Next Story