குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக ரூ.75 லட்சம் மோசடி, பெயிண்டர் கைது


குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக ரூ.75 லட்சம் மோசடி, பெயிண்டர் கைது
x
தினத்தந்தி 15 April 2018 3:45 AM IST (Updated: 15 April 2018 12:40 AM IST)
t-max-icont-min-icon

குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக ரூ.75 லட்சம் மோசடியில் ஈடுபட்ட பெயிண்டர் கைது செய்யப்பட்டார்.

தாம்பரம்,

சென்னை திருவான்மையூரை சேர்ந்தவர்கள் லட்சுமணன், குமுதவள்ளி, பிரேமாவதி, ராஜம்மாள், விஜி, லட்சுமி, பத்மாவதி, உஷா, பரமேஸ்வரி உள்பட 102 பேர் காஞ்சீபுரம் மாவட்ட குற்றபிரிவு போலீசாரிடம் கடந்த 4-ந்தேதி புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அந்த புகார் மனுவில் கூடுவாஞ்சேரியை அடுத்த காயரம்பேடு பகுதியை சேர்ந்த பெயிண்டர் அன்பு என்கிற அன்பழகன் (வயது 50) கடந்த 24.11.2014 முதல் சென்னை திருவான்மியூர் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக எங்களிடம் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பெற்று மொத்தம் ரூ.75 லட்சம் மோசடி செய்துள்ளார் என்று குறிப்பட்டிருந்தனர்.

காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி உத்தரவின்பேரில் காஞ்சீபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகு ரமேஷ், பாஸ்கர் மற்றும் போலீசார் விசாரணை செய்து நேற்று அதிகாலை 5 மணியளவில் அன்பு என்கிற அன்பழகனை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். மேலும் மாவட்ட குற்றவியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட அன்பு என்கிற அன்பழகன் செங்கல்பட்டு குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story