காவிரி பிரச்சினைக்காக தீக்குளித்த வைகோ உறவினர் சாவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்
காவிரி பிரச்சினைக்காக தீக்குளித்த வைகோ உறவினர் இறந்தார்.
மதுரை,
விருதுநகர் ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்தவர் சரவணசுரேஷ்(வயது 50). இவர், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் உறவினர் ஆவார். சரவணசுரேஷ், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.
இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவரை, வைகோ நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்தநிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சரவண சுரேஷ் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் அவரது உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சரவணசுரேஷ் உடல் எடுத்துச்செல்லப்பட்ட அதே வாகனத்தில் வைகோவும் ஏறிச்சென்றார்.
தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
காவிரி மேலா ண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தீக்குளித்த விருதுநகரைச் சேர்ந்தவரும், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் மருமகனுமான சரவண சுரேஷ், இறந்துள்ள செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். வைகோவுக்கும், அவரது குடும்பத்திற்கும் ஆறுதல் கூறும் அதேநேரத்தில், சரவண சுரேஷ் மறைவு என்னை மீளா துயரத்தில் ஆழ்த்தி விட்டது.
தமிழக நலனுக்காக தன் இன்னுயிரை தியாகம் செய்துள்ள இந்த நிகழ்வு, காவிரிப்பிரச்சினை தமிழினத்தின் உயிரோடு கலந்திருப்பதை மீண்டும் அனைவருக்கும் உணர்த்துகிறது. ஆனாலும், இதுபோன்ற தியாகங்களில் இளைஞர்கள் ஈடுபட வேண்டாம் என்று நானும், வைகோவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு இளைஞரும் மாநில நலன் காக்கவும், மண்ணின் உரிமைகளை நிலைநாட்டவும் நடைபெறும் அறவழிப் போராட்டங்களுக்கு எப்போதும் தேவை என்பதால், ஜனநாயக ரீதியிலான போராட்டங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும் என்றும், இதுபோன்ற தீக்குளிப்பு சம்பவங்களில் நிச்சயமாக ஈடுபட வேண்டாம் என்றும் மீண்டும் இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு இரங்கல் செய்தியில் அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story