கமுதி பகுதியில் தொடரும் மணல் திருட்டால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு: தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்


கமுதி பகுதியில் தொடரும் மணல் திருட்டால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு: தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
x
தினத்தந்தி 15 April 2018 3:30 AM IST (Updated: 15 April 2018 12:40 AM IST)
t-max-icont-min-icon

கமுதி பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் மணல் திருட்டால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.

கமுதி,

ராமநாதபுரம் மாவட்டத்தில் குறிப்பாக கமுதி, மண்டலமாணிக்கம், அபிராமம், பேரையூர், கோவிலாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் குண்டாறு, மலட்டாறு, பரளையாறு போன்றவை முக்கிய நீர் ஆதாரமாக விளக்கி வருகிறது.

மழைக்காலங்களில் இந்த ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகமானால் கடலில் சென்று கலந்து விடுவது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக இப்பகுதியில் மழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவுகிறது. மக்களின் குடிநீர் தேவைக்காக ஆற்றுப்படுகைகளில் ஊற்றுத்தோண்டி அதன் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த ஆற்றுப்பகுதிகளில் திருட்டுத்தனமாக மணல் அள்ளி விற்பனை செய்யப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

இதனால் பொதுமக்கள் தண்ணீருக்காக மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story