தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் காரைக்குடி-மேலூர், திருப்பத்தூர்- தஞ்சாவூருக்கு நான்கு வழிச்சாலை, கலெக்டர் லதா தகவல்
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் காரைக்குடியில் இருந்து மேலூருக்கும், திருப்பத்தூரில் இருந்து தஞ்சாவூருக்கும் நான்கு வழிச்சாலை அமைக்கப்படவுள்ளது என்று கலெக்டர் லதா தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
தேசிய நெஞ்சாலை ஆணையம் மூலம் மதுரை மாவட்டம் மேலூர் முதல் காரைக்குடி வரையும், திருப்பத்தூரில் இருந்து தஞ்சாவூருக்கும் நான்கு வழிச்சாலை அமைக்கப்படவுள்ளது. இந்த நான்கு வழிச்சாலை அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம், சிவகங்கை கலெக்டர் அலுவலகத்ததில் நடைபெற்றது. கலெக்டர் லதா கூட்டத்திற்கு தலைமை தாங்கி பேசியதாவது:-
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து கொட்டாம்பட்டி, சிங்கம்புணரி, திருப்பத்தூர், பிள்ளையார்பட்டி வழியாக காரைக்குடிக்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதேபோல் திருப்பத்தூரில் இருந்து பிள்ளையார்பட்டி வழியாக தஞ்சாவூர் வரை நான்கு வழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சாலை அமைத்திட வரைவுகள் தயாரிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஒப்புதல் பெற்று பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன.
எனவே சாலை அமைக்கும் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக சிங்கம்புணரி, திருப்பத்தூர், காரைக்குடி தாசில்தார்கள், கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலருடன் ஆலோசனை மேற்கொண்டு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் வழிகாட்டுதலுடன் உரிய பகுதிகளை தேர்வு செய்து பணிகளை மேற்கொள்ள உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் திருப்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. கே.ஆர்.பெரியகருப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ, தேசிய நெடுஞ்சாலை ஆணை திட்ட இயக்குனர் சரவணன், என்ஜினீயர்கள் முருகானந்தம், புகழேந்தி மற்றும் அரசு துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story