நீலகிரி, கோவை மாவட்டத்தில் காட்டு யானை தாக்கி விவசாயி உள்பட 2 பேர் சாவு
நீலகிரி, கோவை மாவட்டத்தில் காட்டு யானை தாக்கி விவசாயி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
பந்தலூர்,
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை ஊராட்சி மண்வயலை சேர்ந்தவர் சேதுமாதவன் (வயது 45), விவசாயி. இவருடைய மாமியார் வீடு பிதிர்காடு அருகே பெண்ணை நெல்லியாங்குன்னு வனத்தில் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நெல்லியாங்குன்னுவில் உள்ள மாமியார் வீட்டுக்கு சேதுமாதவன் சென்றார்.
இவர், நேற்று காலை 6 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது போதிய வெளிச்சம் இன்றியும், எதிரில் வரும் ஆட்கள் தெரியாத அளவுக்கு பனி மூட்டமும் இருந்தது.
இந்த நிலையில் அந்த பகுதியில் காட்டு யானை நின்றதை சேதுமாதவன் கவனிக்க தவறி விட்டார். இதனால் காட்டு யானை திடீரென்று வந்ததை பார்த்து சேதுமாதவன் அதிர்ச்சி அடைந்தார். ஆனால் காட்டு யானை அவரை துரத்தி தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
சேதுமாதவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து காட்டு யானையை விரட்டினர். பின்னர் அவர்கள், சேதுமாதவனை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் காட்டு யானை தாக்கியதில் சேதுமாதவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த முதுமலை புலிகள் காப்பக முக்கட்டி வனச்சரகர் சுரேஷ், அம்பலமூலா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளவேந்தன், ஏட்டு சித்தராஜ் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சேதுமாதவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கிடையே வனச்சரகர் சுரேஷ் ரூ.50 ஆயிரத்தை இறந்து போன சேதுமாதவனின் மனைவி கிரிஜாவிடம் (40) முதற்கட்டமாக வழங்கி ஆறுதல் கூறினார். மீதமுள்ள ரூ.3½ லட்சம் பின்னர் வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
கோவை மாவட்டம் காருண்யா நகர் சப்பாணிமடம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 85). கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை போளுவாம்பட்டி வனச்சரகம் வெள்ளபதி பிரிவு மண் மேட்டாங்குடி பகுதியில் நொய்யல் ஆற்றங்கரைக்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக காட்டு யானை ஒன்று வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராமசாமி தப்பி ஓட முயன்றார். ஆனால் அதற்குள் காட்டுயானை ராமசாமியை விரட்டிச்சென்று துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலே ராமசாமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து காருண்யா நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து மாவட்ட வன அதிகாரி சதீஷ் கூறியதாவது:-
நொய்யல் ஆற்றங்கரையில் இயற்கை உபாதை கழிப்பதற்காக ராமசாமி சென்றுள்ளார். அப்போது யானை தாக்கியுள்ளது. இதை அங்குள்ள ஆலமர கருப்பன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தவர்கள் பார்த்து, உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தவரை மீட்டுள்ளனர். பின்னர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் அவர் இறந்து விட்டார். யானை தாக்கி ராமசாமி இறந்தது உறுதி செய்யப்பட்டதால் அரசின் மூலம் முதல்கட்டமாக ரூ.50 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
காட்டு யானை தாக்கி நீலகிரி மாவட்டம் பிதிர்காடு பகுதியை சேர்ந்த விவசாயியும், கோவை அருகே முதியவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story