தமிழக அரசுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடருவோம் - ஜவாஹிருல்லா பேட்டி
தமிழக அரசுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடருவோம் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.
கோவை,
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா நேற்று கோவை போலீஸ் கமிஷனர் பெரியய்யாவை சந்தித்து மனு கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். நீண்ட காலமாக சிறையில் இருப்பவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின்போது அறிவிக்கப்பட்டது ஆனால் இதுவரை யாரையும் தமிழக அரசு விடுவிக்க வில்லை. கோவை சிறையில் ஆயுள்தண்டனை கைதிகளாக அடைக்கப்பட்ட வசீர், ரிஸ்வான், தஸ்தகீர், சபீர் ஆகிய 4 பேர் உயிரிழந்துள் ளனர்.
இருசிறுநீரகமும் பாதிக்கப்பட்டுள்ள அபுதாகிர் என்ற கைதி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார். சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டும் அபுதாகிரை தமிழக அரசு இது வரை விடுதலை செய்யவில்லை. எனவே தமிழக அரசு மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர உள்ளோம். ஒரு மாத பரோலுக்கு பின்னர் மீண்டும் அபுதாகிரை சிறையில் அடைத்ததன் காரணமாக உடல் நலம் மீண்டும் பாதிக்கப் பட்டு உள்ளது.
எனவே சிறை முன்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்தோம். தற்போது அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவரது சிகிச்சைக்கான செலவுகளை ஏற்று உள்ளோம். அபுதாகிருக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு எடப்பாடி பழனிசாமி அரசுதான் பொறுப்பு ஏற்கவேண்டும். அபுதாகிருக்கு நிரந்தரமாக பரோல் கொடுக்க வேண்டும், அல்லது அவரை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும்.
காஷ்மீரில் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி படுகொலையில் பாரதீய ஜனதாவினர் ஈடுபட்டு உள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரத்திலும் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவங்கள் இந்தியாவிற்கே தலைகுனிவை ஏற்படுத்தி யுள்ளது.
இந்த இரு சம்பவங்களையும் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சென்னை, கோவை உள்பட தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, மாநில துணைத்தலைவர் உமர், மாவட்ட தலைவர் கபீர், மாவட்ட செயலாளர் ஜெம்பாபு, நிர்வாகிகள் இப்ராகீம், சுலைமான், ஆசிக் அகமது, முகமதுஉசேன் ஆகியோர் உடன் இருந் தனர்.

Related Tags :
Next Story