அம்பேத்கர் பிறந்த நாள் விழா: சிலைக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை


அம்பேத்கர் பிறந்த நாள் விழா: சிலைக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 15 April 2018 4:00 AM IST (Updated: 15 April 2018 1:11 AM IST)
t-max-icont-min-icon

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அனைத்து கட்சியினர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கிருஷ்ணகிரி,

அம்பேத்கர் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிருஷ்ணகிரி தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அ.தி.மு.க., தி.மு.க. உள்பட அனைத்து கட்சிகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அ.தி.மு.க. சார்பில் அசோக்குமார் எம்.பி. தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஊத்தங்கரை மனோரஞ்சிதம் நாகராஜ் எம்.எல்.ஏ., முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் வெங்கடாசலம், நந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி நகர தி.மு.க. சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் நவாப் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ., அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி துணை செயலாளர் வெங்கடேசன், நிர்வாகிகள் நாராயணமூர்த்தி, அஸ்லாம், முகமதுகவுஸ், ஆறுமுகம், துரைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பா.ஜனதா சார்பில் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.எஸ்.நரேந்திரன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் முனிராஜ், மாநில இளைஞர் அணி செயலாளர் நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட எஸ்.சி., எஸ்.டி பிரிவு தலைவர் ஆறுமுகசுப்பிரமணி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏகம்பவாணன், நாஞ்சில் ஜேசு, ரகமத்துல்லா, வின்சென்ட், பன்னீர்செல்வம், நாகராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் திராவிடமணி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், நகர தலைவர் மாரப்பன், நகர செயலாளர் மாணிக்கம், ஒன்றிய தலைவர் சீனிவாசன், செயலாளர் மனோகர், மாவட்ட இளைஞரணி தலைவர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Next Story