காவிரி மீட்பு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
காவிரி மீட்பு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரி நாகையில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்,
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற காவிரி மீட்பு போராட்டத்தில் கலந்து கொண்ட மனிதநேய ஜனநாயக கட்சி பொருளாளர் ஹரூன்ரசித் உள்பட கட்சியினர் மீது தடியடி நடத்தி, அவர்கள் மீது பொய்வழக்கு போட்டு, கைது செய்த போலீசாரை கண்டித்தும், மனிதநேய ஜனநாயக கட்சியினர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை திரும்ப பெற்று, அவர்களை உடனே விடுதலை செய்யக்கோரியும் நாகை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அவுரித்திடலில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நாகை தெற்கு மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் பரக்கத்அலி தலைமை தாங்கினார். மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை முபாரக் கலந்து கொண்டு பேசினார்.
காவிரி மீட்பு போராட்டத்தில் கலந்து கொண்ட மனிதநேய ஜனநாயக கட்சி கட்சியினர் மீது தடியடி நடத்தி, அவர்கள் மீது பொய்வழக்கு போட்டு, கைது செய்த போலீசாரை கண்டித்தும், அவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை திரும்ப பெற்று, உடனே விடுதலை செய்யக்கோரியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் சாகுல்ஹமீது, ஜாகிர்உசேன், முஜிபுர்ரகுமான், முன்னாள் மாவட்ட செயலாளர் செய்யது ரியாசுதீன், ஷேக்மன்சூர், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராமதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர பொருளாளர் அஜிஸ்ரகுமான் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story