தஞ்சையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


தஞ்சையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 April 2018 4:30 AM IST (Updated: 15 April 2018 1:36 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை ஆப்ரகாம்பண்டிதர் சாலையில் தஞ்சை மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார்.இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜெயபால், மாவட்ட தலைவர் கோவிந்தராசு, மாவட்ட பொருளாளர் கண்ணன், மாவட்ட துணைச் செயலாளர்கள் பேர்நீதி ஆழ்வார், அன்பு, டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வீரையன், மாவட்ட பொருளாளர் மதியழகன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

கோரிக்கைகள்

ஆர்ப்பாட்டத்தில் கீழ்க்கண்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தஞ்சை மாவட்டத்தில் 130 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளுடன் இணைந்த பார்களில் 14 பார்கள் மட்டுமே உரிய அனுமதியுடன் செயல்பட்டு வருகிறது. மீதமுள்ள 116 பார்கள் அனுமதியின்றி சட்டவிரோதமாக நடைபெற்று வருகிறது. இதனால் தமிழகஅரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அனுமதியின்றி பார்கள் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தஞ்சை கரந்தை சி.ஆர்.சி. டெப்போ அருகே அனுமதியின்றி செயல்பட்ட பாரில் சோதனை நடத்த சென்ற மாவட்ட டாஸ்மாக் மேலாளர் திருஞானம், துணை மேலாளர் புண்ணியமூர்த்தி, உதவியாளர்கள் வேல்முருகன், தமிழ்வாணன் ஆகியோர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அனுமதியின்றி பார் நடத்த உறுதுணையாக இருக்கும் அதிகாரிகள், போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 

Next Story