மணல் கடத்திய 7 மாட்டு வண்டிகள் பறிமுதல் ரூ.36 ஆயிரம் அபராதம்


மணல் கடத்திய 7 மாட்டு வண்டிகள் பறிமுதல் ரூ.36 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 15 April 2018 4:00 AM IST (Updated: 15 April 2018 1:55 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் பகுதியில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் மணல் கடத்திய 7 மாட்டு வண்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

வேலூர்,

வேலூர் பாலாற்றுப்பகுதியிலிருந்து லாரி, டிராக்டர், மாட்டு வண்டிகளில் மணல் கடத்துவது தொடர்ந்து கொண்டே உள்ளது. இதனை தடுக்க அதிகாரிகளும், போலீசாரும் ரோந்து சென்று கடத்தல் வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் வேலூர் தாசில்தார் பாலாஜி, கிராம நிர்வாக அலுவலர்கள் கனகராஜ், சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் நேற்று சத்துவாச்சாரி ரங்காபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 7 மாட்டுவண்டிகளை மடக்கி சோதனை செய்தனர். அதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

அபராதம்

இது தொடர்பாக மாட்டுவண்டிகளின் உரிமையாளர்களான ரங்காபுரத்தை சேர்ந்த அரவிந்த்குமார், செந்தில், தோட்டப்பாளையத்தை சேர்ந்த சசி, மேல்மொணவூரை சேர்ந்த பாபு, பாரதி, செம்பேடு பகுதியை சேர்ந்த சிவக்குமார், காகிதப்பட்டறையை சேர்ந்த சீனிவாசா ஆகியோருக்கு தலா ரூ.5 ஆயிரத்து 109 என மொத்தம் ரூ.35 ஆயிரத்து 763 அபராதமாக விதிக்கப்பட்டது.

மேலும் இதுகுறித்து வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story