உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம் அமைச்சர் பேச்சு
இந்திய அளவில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது என்று திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் பேசினார்.
அரக்கோணம்,
அரக்கோணம் அருகே ஆட்டுப்பாக்கத்தில் திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் 2-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் க.முருகன் தலைமை தாங்கினார். பதிவாளர் வெ.பெருவழுதி முன்னிலை வகித்தார். முதல்வர் மா.கவிதா வரவேற்றார்.
அரக்கோணம் கோ.அரி எம்.பி., சு.ரவி எம்.எல்.ஏ. ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்துகொண்டு, 397 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
ஏழை மாணவ, மாணவிகள் தாங்கள் வசிக்கும் பகுதி அருகே சென்று படிக்கும் வகையில் கடந்த 6 ஆண்டுகளில் தமிழகத்தில் அரசு சார்பில் புதிதாக 65 இடங்களில் பொறியியல், தொழில்நுட்ப மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளன. அரசு கல்லூரிகளில் விருப்பப்பட்ட பாடப்பிரிவை படிக்கும் வகையில் புதிதாக 961 பாடப்பிரிவுகள் உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்திய அளவில் உயர்கல்வியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையில் தமிழகம் முதல் இடத்தில் இருந்து வருகிறது. 2018-ம் ஆண்டு தேசிய கல்வி தரவரிசையில் இந்திய அளவில் அண்ணா பல்கலைகழகம் 10-வது இடத்திலும், பல்கலைக்கழக அளவில் 4-வது இடத்தையும் பெற்று உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கட்சி நிர்வாகிகள் ஏ.ஜி.விஜயன், பால்ராஜ் சீனிவாசன், ஏ.எம்.நாகராஜன், கீழ்குப்பம் எம்.ஆறுமுகம், ஏ.எல்.நாகராஜன், பெல் கார்த்திகேயன், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story