திருக்கோவிலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் கற்பழிப்பு தப்பி ஓடியவருக்கு போலீஸ் வலைவீச்சு
திருக்கோவிலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கற்பழித்தவரை போலீஸார் தேடிவருகின்றனர்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே உள்ள ஈருடையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் 28 வயது பெண். இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது, மங்களம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் குடிபோதையில் வீட்டுக்குள் புகுந்து அவரை கற்பழித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சல் எழுப்பினார். இந்த சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடோடி வந்தனர். இதைப்பார்த்து ஆறுமுகம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
பின்னர் இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் கொடுத்த புகாரின்பேரில் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவுசெய்து தப்பி ஓடிய ஆறுமுகத்தை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story