மழைகாலங்களில் உருவாகும் இடி-மின்னல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் செல்போன் செயலி


மழைகாலங்களில் உருவாகும் இடி-மின்னல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் செல்போன் செயலி
x
தினத்தந்தி 15 April 2018 3:00 AM IST (Updated: 15 April 2018 2:53 AM IST)
t-max-icont-min-icon

மழைகாலங்களில் உருவாகும் இடி-மின்னல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் செல்போன் செயலி ஒன்றை மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் வெளியிட்டு உள்ளது.

பெங்களூரு, 

மழைகாலங்களில் உருவாகும் இடி-மின்னல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் செல்போன் செயலி ஒன்றை மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் வெளியிட்டு உள்ளது.

செல்போன் செயலி

கர்நாடகத்தில் மழைகாலங்களில் உருவாகும் மின்னல் தாக்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழக்கும் சம்பவங்கள் ஆண்டுதோறும் அரங்கேறி வருகிறது. எனவே இந்த இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் புதிய செல்போன் செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் (கே.எஸ்.என்.டி.எம்.சி.) சார்பில் உருவாக்கப்பட்டு உள்ள இந்த செல்போன் செயலிக்கு ‘சிடிலு’ ( sid-ilu ) என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த செல்போன் செயலியை ‘ஸ்மார்ட் போன்‘ வைத்திருப்பவர்கள் pl-ayst-o-re -ல் சென்று பதிவிறக்கம் (டவுன்லோடு) செய்து கொள்ளலாம்.

இந்த செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்த பிறகு சம்மந்தப்பட்ட நபர் தனது செல்போன் எண்ணை அந்த செயலியில் பதிவு செய்யவேண்டும். இதைத்தொடர்ந்து அந்த செல்போன் எண்ணுக்கு மழைக்காலங்களில் ஏற்படும் இடி-மின்னல் குறித்த தகவல்கள் அந்த செல்போன் செயலி மூலம் எச்சரிக்கப்படும்.

2-வது மாநிலம்

இதுகுறித்து கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மைய இயக்குனர் சீனவாச ரெட்டி கூறுகையில், தனியார் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து இந்த செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. 500 முதல் 600 கிலோ மீட்டர் சுற்றளவில் உருவாகும் இடி, மின்னலை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் வகையில் 11 இடங்களில் சென்சார் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த ஒவ்வொரு சென்சாரின் மதிப்பு ரூ.3 முதல் ரூ.4 லட்சம் ஆகும். இடி, மின்னலின் அளவை பொறுத்து அந்த செயலியில் இருந்து 3 நிறங்களில் சம்பந்தப்பட்ட நபருக்கு எச்சரிக்கை அனுப்பப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவிலேயே இடி-மின்னல் போன்ற இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரிவிக்கும் செல்போன் செயலியை உருவாக்கிய 2-வது மாநிலம் கர்நாடகம் ஆகும். இதற்கு முன்பு இதுபோன்ற செயலியை ஆந்திர மாநிலம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story