தகிசரில் வாடகை காரில் இளம்பெண்ணை கடத்தி பணம், செல்போன்கள் பறிப்பு டிரைவர் உள்பட 2 பேர் கைது
தகிசரில் வாடகை காரில் இளம்பெண்ணை கடத்தி பணம், செல்போன்களை பறித்த டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,
தகிசரில் வாடகை காரில் இளம்பெண்ணை கடத்தி பணம், செல்போன்களை பறித்த டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இளம்பெண் கடத்தல்
மும்பை கொலபாவை சேர்ந்த 24 வயது இளம்பெண் சம்பவத்தன்று அதிகாலை 5 மணி அளவில் தனது தோழி ஒருவரை பார்ப்பதற்காக தகிசருக்கு மின்சார ரெயிலில் வந்தார். பின்னர் அவர் தகிசர் சுங்கச்சாவடி பகுதியில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வாடகை கார் ஒன்று வந்தது. அதில் இருந்து டிரைவர் உள்பட 2 பேர் இறங்கினார்கள். திடீரென இருவரும் இளம்பெண்ணை காருக்குள் தூக்கி போட்டு கடத்தி சென்றனர்.
பின்னர் பெண்ணின் பணப்பையில் இருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் 2 செல்போன்களை பறித்து கொண்டனர்.
2 பேர் கைது
மேலும் பெண்ணின் செல்போனில் இருந்த அவரது கணவரின் எண்ணை தொடர்பு கொண்டு ரூ.20 ஆயிரம் தர வேண்டும் என்று மிரட்டி உள்ளனர்.
பின்னர் தானே கோட்பந்தர் பகுதியில் பெண்ணை காரில் இருந்து வெளியே தள்ளி விட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். வீடு திரும்பியதும் இளம்பெண், கணவருடன் தகிசர் போலீஸ் நிலையம் சென்று சம்பவம் குறித்து புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் இளம்பெண்ணை கடத்தி பணம் பறித்தது பிவண்டியை சேர்ந்த ஒலா வாடகை கார் டிரைவர் நீரஜ் சவுத்ரி, அவரது நண்பரான தகிசரை சேர்ந்த ராஜேஸ் யாதவ் (30) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story