திண்டுக்கல் பஸ்நிலையத்தில் பயணிகள் அறையில் திடீர் தீ


திண்டுக்கல் பஸ்நிலையத்தில் பயணிகள் அறையில் திடீர் தீ
x
தினத்தந்தி 15 April 2018 5:35 AM IST (Updated: 15 April 2018 5:35 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் பஸ்நிலையத்தில் பயணிகள் அறையில் திடீரென ஏற்பட்ட தீயினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல், 

திண்டுக்கல் பஸ்நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான பயணிகள் தங்கும் விடுதி உள்ளது. இங்கு 20-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. நேற்று ஒரு அறையில் தஞ்சாவூரை சேர்ந்த 3 பயணிகள் தங்கி இருந்தனர். அவர்கள் சமையல் செய்வதற்காக அங்கிருந்த கியாஸ் அடுப்பை பற்ற வைத்தனர். அப்போது, சிலிண்டரில் எதிர்பாராதவிதமாக கியாஸ் கசிவு ஏற்பட்டதால் திடீரென தீப்பிடித்தது. உடனே 3 பேரும் சேர்ந்து சாக்கை எடுத்து சிலிண்டரை மூடி தீயை அணைத்தனர். பின்னர் சிலிண்டரை தூக்கி மேலே உள்ள மாடியில் கொண்டு போட்டனர். பயணிகள் சாமர்த்தியமாக செயல்பட்டு தீயை உடனடியாக அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Next Story