வெற்றியை நோக்கி விரைந்திடும் பெண்கள்..
வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்ற கனவு எல்லா பெண்களிடமும் இருக்கிறது. பள்ளிப் பருவத்திலே அந்த கனவுக்கான வடிவங்களை கொடுக்கத் தொடங்கி விடுகிறார்கள்.
கனவுகளை நோக்கி அவர்கள் சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று ஏதாவது ஒரு தடை வந்துவிடுகிறது. அதை தாண்ட முடியாத பல பெண்கள், அதோடு தங்கள் முன்னேற்ற கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறார்கள். ஈரோடு பகுதியை சேர்ந்த யோகேஸ் வரிக்கும் பள்ளிப் பருவத்தில் இருந்தே தொழில்முனைவோர் ஆகவேண்டும் என்ற கனவு இருந்திருக்கிறது. ஆனால் பிளஸ்-2 முடித்ததும், திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். ‘அவ்வளவுதான்.. இனி இவரது வாழ்க்கை குடும்பம்.. குழந்தைகள்.. என்று ஒரு கூட்டுக்குள்ளே முடங்கிப்போய்விடும்’ என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்க, அவரோ குடும்பத்தையும் சிறப்பாக நிர்வகித்துக்கொண்டு, திட்டமிட்டு படித்து, உழைத்து, தொழில் முனைவோராகும் தனது கனவையும் நிறைவேற்றிவிட்டார்.
தையல் கற்று முதலில் சிறிய துணிக்கடையை தொடங்கிய இவர், பின்பு ஆடை வடிவமைப்பாளராகி, இப்போது தையல் பயிற்சியாளராகி ஏராளமான பெண்களுக்கு தையல் கற்றுக்கொடுக்கிறார். பல இடங்களில் கிளைவிட்டு இவர் தொழில் படர்ந்து கொண்டிருக்கிறது. ‘எல்லா பெண்களுக்குள்ளும் ஒரு தொழில்முனைவோர் இருக்கிறார். திருமணத்திற்கு பின்பும் திறமைகளை வளர்த்துக்கொண்டு, நம்மால் சிறந்த தொழில்முனைவோராக ஜொலிக்கமுடியும். திருமணம் பெண்களின் வளர்ச்சிக்கு தடையே இல்லை’ என்கிறார், 36 வயதாகும் யோகேஸ்வரி.
தன்னம்பிக்கை நிறைந்த இவர் சாதித்ததை படிப்படியாய் சொல்லக் கேட்போம்!
பிளஸ்-2 படித்து முடித்த உடனே திருமணம் செய்துகொள்ள வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு ஏன் உருவானது?
எனது தந்தை உலகநாதன் கட்டிட காண்டிராக்டர். எனது தாயார் கிருஷ்ணவேணி. எனக்கு சுபாஷினி என்ற தங்கை இருக்கிறார். நாங்கள் வசதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தோம். ஆனால் வீட்டில் இரண்டும் பெண்கள் என்பதால் பெற்றோர் தங்கள் கடமை விரைவாக முடியவேண்டும் என்பதற்காக, எனக்கு திருமணம் செய்துவைக்க விரும்பியிருக்கிறார்கள். இருந்தபோதும் திருமணம் குறித்து என்னிடம் எதுவும் கூறவில்லை. பிளஸ்-2 தேர்வு முடிந்த ஓரிரு நாளில் நிச்சயதார்த்தம் என்றார்கள். அப்பாவை எதிர்த்து பேசி பழக்கம் இல்லாததால், எதுவும் கூறாமல் ஒப்புக்கொண்டேன். அடுத்த இரண்டு மாதங்களில் திருமணம் நடந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்துவிட்டதுபோல் தோன்றியது.
குடும்ப வாழ்க்கைக்குரிய மனப்பக்குவத்தை அப்போது பெற்றிருந்தீர்களா?
பள்ளிப்படிப்பு முடிந்ததும் கல்லூரிக்கு சென்று படிக்க வேண்டும் என்ற கனவு இருந்தது. ஆங்கில இலக்கியம் கற்க ஆசைப்பட்டேன். இந்த நிலையில் திடீரென்று நடந்த திருமணம் என்னை திகைக்க வைத்து விட்டது. ஆனால் எனது கணவர் மிக நல்லவர். எனது வளர்ச்சிக்கு பக்கபலமாக இருப்பதாக கூறி எனக்கு ஊக்கம் தந்தார். இருந்தாலும் பள்ளிப் படிப்பை முடித்த 2 மாதத்திலேயே குடும்பத் தலைவியாக மாறுவது சற்று சிரமமாகத்தான் இருந்தது. எனது மாமியார் மோகனாம்பாள், மாமனார் ராமன் ஆகியோர் உதவிகரமாக இருந்தனர். மாமியார் எனக்கு சமையல் கற்றுத்தந்தார். நான்கு ஆண்டுகள் கூட்டுக்குடும்பமாக வைத்து வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் எனக்கு கற்றுக்கொடுத்தார்கள். அதுபோல் எங்கள் குடும்பத்தில் எதிர்பாராத பொருளாதார நெருக்கடி திடீரென்று ஏற்பட்டதும், குடும்பத்தின் சூழல் புரிந்து நானும் சம்பாதிக்க முன்வந்தேன். எனது கணவருக்கு உதவியாக அவர் நடத்திய கடைக்கு சென்றேன். தொழிலை கற்றேன். பொதுமக்கள் தொடர்பும் கிடைத்தது. வருமானமும் வந்தது. அது எனது அடுத்தகட்ட இலக்கை எளிதாக்கியது.
18 வயதில் திருமணம் செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்படும் பெண்களுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன?.
18 வயதுக்கு மேல்தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற சட்டம் இருப்பதால் இப்போது சிறு வயது திருமணங்கள் நடப்பதில்லை. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 18 வயதுக்கு முன்பே நிறைய பேருக்கு திரு மணம் நடந்தது. அவர்கள் திருமணத்தோடு வாழ்க்கை முடிந்து விட்டது என்று நினைக்கக் கூடாது. அவர்களால் மற்றவர்களைவிட சிறப்பாக சாதிக்க முடியும். ஆனால் அதற்கு கடுமையான முயற்சியும், உழைப்பும் தேவை. இப்படி நான் சொல்ல என்ன காரணம் என்றால், 25 வயதுக்குள் அவர்களின் குழந் தைகள் பள்ளிக்கூடத்துக்கு சென்றுவிடுவார் கள். அதனால் அவர்களுக்கு அதிக ஓய்வு நேரம் கிடைக்கும். அந்த நேரத்தில் டி.வி. பார்த்து பொழுதுபோக்காமல் வாழ்க்கைக்கு தேவையான கைத்தொழில்களை கற்றுக் கொள்ள வேண்டும். தொழில் பயிற்சிகள், கணினி தொடர்பான படிப்புகளையும் படித்து அதன் மூலம் தொழில் செய்தால் வீட்டில் இருந்தே சம்பாதிக்க முடியும்.
நான் முதலில் தொலைதூர கல்வித்திட்டத்தில் ஆங்கில இலக்கியம் கற்க சேர்ந்தேன். அடுத்து கம்ப்யூட்டர் கல்வி கற்றேன். பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே ஓவியம் வரைவதிலும், மெகந்தி போடுவதிலும் ஜூவல்லரி டிசைனிங்கிலும், பூவேலைப்பாடுகள் செய்வதிலும் அதிக ஈடுபாடுகாட்டினேன். பின்பு வீட்டின் அருகில் உள்ளவர்களுக்கு மெகந்தி அலங்காரம் செய்தேன். அப்போது என் திறமையை பாராட்டிய பலர் என்னிடமே மெகந்தி போட கற்றுத்தரும்படி கேட்டார்கள். அவர்களுக்கு பயிற்சி கொடுத்தேன். அடுத்து தையல், எம்ப்ராய்டரிங் போன்றவைகளை கற்றுக்கொண்டேன். அதைவைத்து தொழில்முனைவோராக முயற்சித்தேன். என் கணவரிடம் சொன்னதும் அவர் நான் சுயமாக தொழில் தொடங்க கடை ஒன்றை ஏற்பாடு செய்து தந்ததோடு தேவையான முதலீட்டையும் வழங்கினார். அதில் இருந்து என் வளர்ச்சி வேகமெடுத்தது. தையல், ஆடை வடிவமைப்பில் நான் தனிக்கவனம் செலுத்தினேன்.
பெண்கள் பல விதமான கைத்தொழில்களை கற்றுக்கொண்டாலும் அவர்களுக்கு தையல் தொழில்தான் மிகவும் ஏற்றது. பெண்கள் தையல் தொழில் கற்றுக்கொண்டால் முதலில், அவர்களின் துணியை தைக்கும் செலவு மிச்சமாகும். குடும்பத்தில் நான்கு பேர் இருந்தால், அவர்கள் அனைவருக்கும் அந்த பெண்ணே துணிதைத்து கொடுக்கலாம். பின்பு அருகில் உள்ளவர்களுக்கு தைத்து கொடுக்கலாம். தேவைக்கு பணம் வந்துகொண்டே இருக்கும். புதிது புதிதாக கற்று அதில் புதுமையை புகுத்தும்போது வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். அதனால்தான் தையலை பெண்களுக்கு ஏற்ற கைத்தொழில் என்று கூறுகிறோம். எம்ப்ராய்டரிங்கும் கற்றுக்கொண்டால் அதிகம் சம்பாதிக்கலாம். இந்த தொழிலுக்கு முதலீடும் தேவையில்லை.
பொதுவாக பெண்கள் திருமணத்திற்கு பிறகு புதிய கைத்தொழிலை கற்றுக்கொள்ள விரும்பினால் எத்தகைய தடைகள் வரும். அவைகளை தவிர்ப்பது எப்படி?
திருமணமான பெண்கள் குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். புதிய தொழில் பயிற்சிக்கு செல்லும் பெண்கள், குடும்பத்தை கவனிக்காமல் இருந்துவிடுவார் களோ என்ற கவலை, குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு ஏற்படலாம். கூடுதல் நேரம் எடுத்து குடும்ப பராமரிப்பில் முழுஈடுபாடு காட்டினால் அந்த தடையை அகற்றிவிடலாம். கணவர், குழந்தைகளை கவனிப்பது போன்றவைகளில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை. எல்லா பெண்களும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்துதான் ஆகவேண்டும். இதெல்லாம் பெரிய விஷயமில்லை. ஆனால் சமூகம் சில நேரங்களில் பெருந்தடையாக இருக்கும். பயிற்சி என்று கூறிக்கொண்டு செல்லும் பெண் எங்கே போகிறாள்? என்ன செய்கிறாள்? என்று கண்காணித்துக் கொண்டிருப்பார்கள். அத்தகைய தேவையற்ற மனிதர்களுக்கு மதிப்பு கொடுக்கக்கூடாது. அவர்களை புறந்தள்ளிவிட்டு நமது இலக்கை நோக்கி தெளிவாகவும், ஒழுக்கமாகவும் முன்னேறிச் சென்றுகொண்டிருக்கவேண்டும். நாம் செல்வது சரியான பாதை என்று தெரிந்துகொண்டால் நம்மை கண்காணிப்பவர்கள்கூட பாராட்டத்தொடங்கி விடுவார்கள். அதை எல்லாம் கடந்து பயிற்சிக்கு வரும் பெண்கள் தனது திறமையால் சம்பாதித்து, குடும்பத்தையே சிறப்பாக வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள். கைத் தொழில் கற்று பணம் சம்பாதிக்கும் பெண்களிடம் பணிவும், பக்குவமும் இருந்தால் எந்த குடும்பத்திலும் பிரச்சினைகள் வராது. அதையும் மீறி பிரச்சினைகள் வந்தாலும், அவை களை சமாளிக்கும் ஆற்றல் எல்லா பெண்களிடம் இருக்கிறது.
பெண்கள் சம்பாதிக்கத் தொடங்கிய பின்பு அதிலே மூழ்கி, ஆரோக்கியத்தை கோட்டைவிட்டு விடுகிறார்களே?
இது உண்மைதான். எனக்கு தெரிந்த சில பெண்கள் வெறும் டீயை மட்டும் குடித்து பசியை போக்கிக்கொண்டு தொடர்ந்து உழைக்கிறார்கள். இதனால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, சம்பாதித்த பணத்தை மருத்துவமனையில் செலவழிக்க வேண்டிய தாகிவிடுகிறது. ஆனாலும் ஆரோக்கியத்தை மீட்க முடியாத சூழ்நிலை உருவாகிறது. பெண்களின் ஆரோக்கியம் என்பது அந்த குடும்பத்தின் நிரந்தர சொத்து. அதனால் பெண்கள் ஆரோக் கியத்தில் கவனம் செலுத்தியே ஆகவேண்டும். நான் இதில் தெளிவாக இருக்கிறேன். எப்போதும் சரி யான நேரத்தில் சாப்பிடுகிறேன். கணவர், குழந்தைகளையும் சரியான நேரத்தில் சாப்பிட வைக்கிறேன். எனது ஆரோக்கி யத்தில் அதிக அக்கறை செலுத்துகிறேன். நன்றாக வாழத்தானே சம்பாதிக்கிறோம்.
(யோகேஸ்வரி - சந்திர சேகரன் தம்பதிகளுக்கு மைதிலி, அபர்ணா ஆகிய இரண்டு மகள்கள் இருக் கிறார்கள். மகள்களுக்கும் இவர் கலைத் தொழில்களை கற்றுக் கொடுத்து வருகிறார்)

Related Tags :
Next Story